மத்திய அமைச்சர் தனுஷ்? வெள்ளி விளக்கில் ‘குறியீடு’.. டெல்லி டிரிப்பில் முடிந்த டீல்? பரபர பாலிடிக்ஸ்

  • சென்னை: நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் வெள்ளி காமாட்சி விளக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார். ஏற்கனவே பாஜகவில் தனுஷ் இணையப் போவதாகவும், மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படலாம் என சமூக வலைதளங்களில் யூகங்கள் பரவி வரும் நிலையில், மகளிரணியினருக்கு வழங்கிய வெள்ளி காமாட்சி விளக்கில் இருந்த சின்னம் அந்த யூகங்களை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

    Advertisement

    நடிகராக இருந்து தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியும் பெற்று முதல்வராகிவிட்டார். இது அடுத்து நடிகர்கள் பலருக்கும் மீண்டும் அரசியல் ஆசை துளிர் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்து இருக்கிறார் தனுஷ்.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அரசியல் கட்சியினரும் அவரைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றனர். முதற்கட்டமாக தனுஷின் ரசிகர் நற்பணி மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, நிர்வாகிகள், ரசிகர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்.

    தனுஷ்

    மேலும் கொடி அறிமுகமும் இந்த பேச்சுகளை உறுதிப்படுத்தியது போலவே இருந்தது. இதற்கிடையே சமீபத்தில் தனுஷ் டெல்லிக்குச் சென்றதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக தான் தனுஷ் டெல்லி சென்றார் என்றும் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் தனுஷின் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

    Advertisement
    'எத்தன சாமி வந்ததையா' பாட்டை பாடுனாரு.. வேற என்னலாம் சொன்னாரு தனுஷ்? ரசிகைகள் சொன்ன தகவல்!

    மகளிரணி சந்திப்பு

    இதற்காகக் கல்லூரி வளாகம் முழுவதும் வண்ணமயமான வரவேற்புப் பதாகைகளும், கட்-அவுட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர். தனுஷை வரவேற்று, "பெண்களின் குரல் உயர்ந்தால்தான் சமூகத்தின் எதிர்காலமும் உயரும்; எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ், எங்கள் தலைவரே!" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

    "தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM" - அமைச்சர் CTR நிர்மல்குமார்
    Advertisement

    உற்சாக வரவேற்பு

    நிகழ்ச்சிக்காக சுமார் 3,000 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 5,000 மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றதாகவும் சொல்லப்படுகிறது. மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் வெள்ளை நிற உடையில் வந்த போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நற்பணி மன்றமாக மாறிய பின்.. முதல் கூட்டமே மகளிர் அணிக்கு தான்.. திட்டம் தீட்டிய தனுஷ்.. பின்னணி!

    வெள்ளி விளக்குகள்

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அவர்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்குகளையும் பரிசாக வழங்கினார். கிட்டத்தட்ட 5000 பேருக்கு வெள்ளியினால் ஆன காமாட்சி விளக்குகள் வழங்கப்பட்ட நிலையில் மகளிர் அணி நிர்வாகிகள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் அந்த வெள்ளி காமாட்சி விளக்கு பின்புறத்தில் இடம் பெற்றிருந்த குறியீடுதான் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    தாமரை சின்னம்

    ஜிஆர்டி ஜூவல்லர்சில் ஒட்டுமொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்ட அந்த காமாட்சி விளக்குகளின் பின்புறத்தில் தாமரை சின்னம் சிறிய அளவில் பொறிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் சின்னம் தான் தாமரை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சொன்னது போல சமீபத்தில் தனுஷ் டெல்லி பயணம் மேற்கொண்ட போது அங்கு பாஜக தலைவர்கள் சிலரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

    அதிமுக

    ரஜினிகாந்தின் ஆசியோடு அரசியலுக்கு வந்தால் அனைத்து ஏற்பாடுகளை செய்ய தயார் என டெல்லி அவருக்கு வாக்குறுதி அளித்ததாக ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் தனியாக கட்சி ஆரம்பிப்பதை விட அதிமுகவில் இணைந்து பயணித்தாலும் தங்களின் ஆசிர்வாதம் இருக்கும் என்றும் மத்திய அரசில் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு அளிப்போம் என சொன்னதாகவும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர்.

    Advertisement

    மத்திய அமைச்சர் தனுஷ்?

    தற்போதைய தகவல்களின்படி ஏற்கனவே பல தேசிய விருதுகளை தனுசுக்கு ஆஃபராக கொடுத்த மத்திய அரசு அமைச்சர் பதவியை தரலாம் என்று சொல்கின்றனர். இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காமாட்சி விளக்கின் பின்புறத்தில் தாமரை சின்னத்தை இடம்பெற வைத்திருக்கிறார் தனுஷ் என்கின்றனர்.

    English Summary

    Dhanush gifts silver Kamakshi lamps to women’s wing members, sparking BJP links and Union Minister speculation amid reports of his Delhi visit.