சென்னை: நடிகராக இருந்து விஜய் சக்சஸ் அரசியல்வாதியாக மாறி தற்போது முதலமைச்சராக உருவெடுத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர்கள் ஒவ்வொருவராக அரசியல் என்ட்ரிக்கு அச்சாரம் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தனுஷ் அறிமுகப்படுத்திய கொடியில் மேலே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு நிறமும் இடம்பெற்றிருக்கிறது. நடுவில் சிவப்பு நட்சத்திரம் இடம் பெற்றிருக்கிறது.
பொதுவாக ரசிகர் மன்ற கொடி எனில், அதில் அந்த நடிகரின் உருவப்படம்தான் இடம்பெற்றிருக்கும். ஆனால், தனுஷ் வெளியிட்டிருக்கும் இந்த கொடியில், அவரது புகைப்படத்துடன் சேர்த்து நட்சத்திரம் இடம் பெற்றிருப்பது.. தனுஷ் அரசியல் என்ட்ரி கொடுக்க ட்ரை செய்கிறாரோ? என்கிற கேள்வியை எழுப்புவதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த கருப்பு திரைப்படத்தில், சூர்யா சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்படியெனில் சூர்யாவுக்கும் பொலிட்டிக்கல் ஆசை இருக்கிறது.. என பேசப்பட்டது. அவரது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், சூர்யா விரைவில் அரசியல் என்ட்ரி கொடுக்கப்போகிறார் என்று பேசியிருந்தார். ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று ரசிகர் மன்றம் விளக்கம் கொடுத்திருந்தது. இப்படி சூர்யாவின் சலசலப்பு ஓய்வதற்குள் தற்போது தனுஷ் தனது ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தி.. அரசியல் பேசுபவர்களுக்கு கண்டென்ட் கொடுத்திருக்கிறார். எல்லாம் ஒகேதான்.. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. அரசியல் கட்சியை தொடங்கலாம். ஆனால், ரஜினி மாதிரி தனுஷும் கட்சி தொடங்குகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிடக்கூடாது என அவரது ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். இதுபோக நடிகர் டி.ராஜேந்திரனின் லட்சிய திமுக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போல.. தனுஷ் கட்சியும் சுருங்கிவிடக்கூடாது என்றும் ஆதங்கப்படுகின்றனர். சமக இப்போது பாஜகவுடன் ஐக்கியமாகிவிட்டது என்பது தனிக்கதை! பொறுத்திருந்து பார்ப்போம்.. தனுஷ் ரசிகர் மன்றத்தோடு நின்றுவிடுகிறாரா? அல்லது அதிரடி அரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா என்று!