தாராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? களத்திலிருந்து ஒன்இந்தியாதமிழ் பிரத்யேக தகவல்!

  • சென்னை: தாராபுரம் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவுவதை "ஒன்இந்தியாதமிழ்" தனது முதல் நாள் கள ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஆளும் கட்சியான தவெகவை 3வது ஆப்ஷனாகத்தான் அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற்று, 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி இரு தொகுதிகளிலும் ஒன்இந்தியாதமிழ் கள ஆய்வுகளை செய்து வருகிறது. மதுராந்தகத்தில் நிருபர் குழு பல கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் நடத்திய கள ஆய்வில் பெண்கள் அதிலும் இளம் பெண்கள் தவெகவிற்கு பெருவாரியாக ஆதரவு அளிப்பதையும், ஆண்களில், அதிமுகவுக்கும், அதற்கு அடுத்தபடியாக திமுகவுக்கும் ஆதரவு இருப்பதையும் கண்டறிந்து உங்களுக்கு செய்தியாக அளித்திருந்தோம்.

    Advertisement

    தற்போது நமது குழு தாராபுரத்தில் முகாமிட்டுள்ளது. நேற்றைய தினம் விஜய் தாராபுரம் பொதுக்கூட்டத்திற்காக வந்திருந்தார். அந்த சூட்டோடு சூடாக பல கிராமங்களிலும், தாராபுரம் நகர பகுதியிலும் நமது குழு மக்களிடம் கருத்து கேட்டது. அதை வைத்து பார்த்தால் அதிமுக-திமுக இடையே கடும் போட்டி இருப்பதை உணர முடிந்தது. தவெகவுக்குதான் ஓட்டு என மிக குறைவான சதவீதத்தினரே தெரிவித்தனர். பலருக்குமே, அதிமுகவிலிருந்து வெற்றி பெற்ற, சத்யபாமா, திடீரென தவெகவுக்கு தாவியதை ஏற்க முடியவில்லை என்பதை உணர முடிந்தது. நம்மிடம் பேசிய நடுத்தர வயது ஆண், கட்சி தாவியவரை செ..ப்பால் அடித்தாலும் தகும் என பொங்கியது நமக்கே ஷாக்காக இருந்தது.

    Advertisement

    அதேநேரம், இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்களை பொறுத்தளவில் வாய் திறக்க மறுக்கின்றனர். மதுராந்தகம் போலன்றி, இங்கு மீடியாக்களிடம் பேச இளம் தலைமுறைக்கு தயக்கம் இருப்பதை பார்க்க முடிந்தது. எனவே அவர்களது கருத்து என்ன என்பதை முழுமையாக அறியமுடியவில்லை. இன்றும் நமது குழு தாராபுரத்தில் முகாமிட்டு தொகுதி மக்களிடையே கருத்து கேட்டு வருகிறது. இளைஞர்கள் மன ஓட்டத்தை இன்று அறிய முற்படுகிறோம். கூடுதல் தகவல்களையும் திரட்டி வருகிறோம். நாளை உங்களிடம் அதையும் செய்தியாக வழங்குகிறோம்.

    தற்போதைய நிலவரப்படி தாராபுரத்தை தவெக மறக்க வேண்டியதுதான்போல. ஆனால் நேற்றைய அழுகை, ஆறுதல் காட்சிகளுக்கு பிறகு மக்கள் மனது மாறிவிட்டதா என்பது இன்றைய கள ஆய்வில் தெரிந்துவிடும். நாளை சந்திப்போம்..

    Advertisement

    தாராபுரம் வேட்பாளர்கள் விவரம்:

    தவெக-சத்யபாமா

    திமுக-சுகன்யா

    அதிமுக-பானுமதி

    இந்திய கம்யூனிஸ்ட்-லட்சுமணன்

    நாம் தமிழர்-கார்த்திகா

    English Summary

    Who will win in Dharapuram Assembly constituency? Oneindia Tamil brings you the people's mindset from the field.