நிலவரம் கலவரம்..சிஎம் விஜய் காதுக்கு போன மேட்டர்! மீண்டும் நாளை தாராபுரத்தில் பிரச்சாரம்! என்னாச்சு?

  • சென்னை: மதுராந்தகம் - தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. மதுராந்தகத்தில் வெற்றி பெற்று விடலாம் என தமிழக வெற்றிக் கழகம் நம்பிக்கையில் இருக்கும் நிலையில், தாராபுரத்தில் நிலைமை சற்று மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் நாளை தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சருன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.

    Advertisement

    தமிழகத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

    Advertisement

    இந்த தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டிருக்கிறார்.

    இடைத் தேர்தல்

    மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய மதுராந்தகம் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா, சம்பத் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    Advertisement

    களத்தில் யார்?

    மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 28 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 9ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சி என மொத்தம் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. தற்போதைக்கு தாராபுரத்தில் 29 பேர் களத்தில் உள்ளனர்.

    Advertisement

    பிரச்சாரம் ஓய்கிறது

    அக்டோபர் 6ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரை சென்னைக்கு அருகே இருக்கும் தொகுதி என்பதால் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையில் இருக்கிறது.

    முதலமைச்சர் விஜய்

    மேலும் இரண்டு முறை அங்கு முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்ததும் வாக்காளர்களுடைய ஆதரவை பெருக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மதுராந்தகம் தொகுதியில் மட்டும் நிலைமை சற்று மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தவெக வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் விரட்டி அடித்து வரும் நிலையில் இது தொடர்பான தகவல் உளவுத்துறை மூலம் முதல்வரின் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Advertisement

    தாராபுரம் தொகுதி

    இதை அடுத்து நாளையும் அவர் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். மதுராந்தகத்தை போலவே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது, பொதுமக்களை சந்திப்பது, விவசாயிகள் சந்திப்பு என பல்வேறு திட்டங்கள் இருக்கிறதாம். அது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமைச்சரவை பட்டாளமும் தாராபுரத்தை சுற்றியே வளம் வந்து கொண்டிருக்கிறது. கடைசி நேரத்தில் 'கவனிப்பும்' பலமாக இருக்கும் என்கின்றனர். தற்போதைக்கு 2க்கு 1 என்ற நிலையில் தவெக இருக்கும் நிலையில் அதை 2ஆக மாற்ற வேண்டும் என முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    English Summary

    CM Vijay will campaign again in Dharapuram tomorrow as TVK intensifies its final push before the October 6 bypoll.