தாராபுரத்தை தட்டித் தூக்கப் போவது யார்? பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை! கடந்த தேர்தல் ரிசல்ட் என்ன?

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் அதிமுக - திமுக - தவெக இடையே கடும் போட்டி நிலவுவதாக சொல்லப்படும் நிலையில் கடந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருந்தன? இந்த தேர்தலில் கள நிலவரம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,23,306 வாக்காளர்களில் 1,79,214 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 80.25% வாக்குப்பதிவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    Advertisement

    மொத்தம் 320 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட 642 பேலட் யூனிட்கள், 321 கன்ட்ரோல் யூனிட்கள், 337 VVPAT இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தனித்தனியாக அறிவிக்கப்படுகிறது. கடந்த பொதுதேர்தலில் சுமார் 89.9%வாக்குகள் பதிவாகிய நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் 80.25% வாக்குகள் பதிவாகியுள்ளது. சுமார் 9.65 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கடந்த தேர்தல் முடிவுகளை சுருக்கமாகப் பார்க்கலாம். கடந்த சட்டசபை தேர்தலல் மதுராந்தகத்தைப் போலவே தாராபுரம் தொகுதிலும், தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்று இருந்தது.

    தற்போது இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டிருக்கிறார்.

    தாராபுரம் தனித் தொகுதியிலும் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில், வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இந்திராணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கௌரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர்.

    Advertisement

    சுமார் 1.99 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி சுமார் 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தவெக வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றார்.

    English Summary

    Dharapuram bypoll vote counting begins amid a three-way contest between TVK, DMK and AIADMK, with turnout at 80.25%.