சென்னை: பாஜக பற்றிப் பேசும் போதெல்லாம் விஜய் ஏன் அமைதி காக்கிறார்? பாஜகவை பற்றிப் பேசும்போது மட்டும் ஏன் இவ்வளவு பயம்? தவெக அரசு தொடை நடுங்குகிறது என்கிறார் எழும்பூர் திமுக பரந்தாமன்.. இப்படி தொடை நடுங்கும் அளவுக்கா அரசியல் செய்யணும்? அமித்ஷா பற்றி முதலமைச்சர் பேசுவதே கிடையாது.. பிரதமர் குறித்து வார்த்தையே வருவதில்லையே ஏன்?" என்று வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கோடீஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "கவர்னருடன் விஜய் நட்பு பாராட்டுவதை பார்த்தாலோ, அமித்ஷாவுடன் நட்பு பாராட்டுவதைப் பார்த்தாலோ அல்லது பிரதமர் மோடியை மெட்ரோ ரயில் திட்டத்தைத் திறந்து வைக்க அழைத்ததைப் பார்த்தாலோ, தவெக ஆட்சியை, பாஜக கவிழ்க்கிற மாதிரி தெரியவில்லையே
பாஜக என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது மட்டும், அவர்கள் கோபப்படாத மாதிரி மிகவும் பார்த்துப் பார்த்து கவனமாகப் பேசுகிறார் முதலமைச்சர் விஜய்.. என்னுடைய அம்மாவைப் பற்றியும் தன் வீட்டில் இருந்தவர்களைப் பற்றியும் தப்பா பேசிவிட்டார்கள் என்று எமோஷனலாக பேசுகிறார் விஜய். திமுக, அதிமுகவில் யாருமே தவறாக பேசவில்லையே? அப்படி பேசியது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.. ஆனால் அவர் மீது இம்மியளவு கூட கோபமே வரமாட்டேங்குதே.. பொதுவாக யாராக இருந்தாலும், எந்த பெண்ணையும் தவறாக பேசக்கூடாது.. எனினும், முதலமைச்சரிடம்தானே காவல்துறை உள்ளது? அத்தனை பவரையும் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் வந்து இப்படி புகார் சொன்னால், மக்கள் என்ன நினைப்பார்கள்? முதலமைச்சராக இருப்பவர் காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கையைதானே எடுத்திருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதற்கே, உடனே காலையிலே அவரது வீட்டைச் சுற்றி போலீஸை அனுப்பி, அவரை கைது செய்து தஞ்சாவூரில் ஒன்-டே டூர் கூட்டிட்டு போனார்கள்.. ஆனால், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் வரும்போது ஏன் பயப்படுகிறீர்கள்? ஐயூஎம்எல் கட்சிக்கு, பணப்பட்டுவாடா பேசப்பட்டது குறித்து, மலேசியாவில் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக புரூவ் செய்யட்டுமா என்று கராத்தே தியாகராஜன் சவால் விட்டு கேட்டார்.. "ஒருமுறை நாங்கள் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறோம் என்று தேர்தலின் போது நீங்கள் யார் யாரிடமெல்லாம் பேசினீர்கள், யார் யாரிடமெல்லாம் கெஞ்சினார்கள்" என்பது குறித்தெல்லாம் நான் சொல்லட்டுமா என்று நிர்மல்குமாரை நயினார் நாகேந்திரன் அன்று கேட்டாரே? தவெக தரப்பிலிருந்து முறையான பதில்கள் இதுவரை இல்லையே. இப்படி பாஜக பற்றிப் பேசும் போதெல்லாம் விஜய் ஏன் அமைதி காக்கிறார்? பாஜகவை பற்றிப் பேசும்போது மட்டும் ஏன் இவ்வளவு பயம்? முதலமைச்சர் தொடை நடுங்குகிறார் என்கிறார் எழும்பூர் திமுக பரந்தாமன்.. இப்படி தொடை நடுங்கும் அளவுக்கா அரசியல் செய்யணும்? அமித்ஷா பற்றி பேசுவதே கிடையாது.. பிரதமர் குறித்து வார்த்தையே வருவதில்லை,. தவெக இந்த இடைத்தேர்தலில் தோற்றுவிட்டால் அவர்கள் கட்டமைத்த பிம்பம் உடைந்துவிடும். ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்க வேண்டும் என்பதற்காகக் குதிரை பேர அரசியல் மூலம் எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் மாற்ற முயல்கிறார்கள். தவெக மற்றும் பிற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ-க்களை விசில் சின்னத்திற்கு கொண்டு வந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். முதலமைச்சராக இருப்பவர் மக்களுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு, எந்த எம்.எல்.ஏ-வை தூக்கலாம் என்று சிந்திப்பது தவறு. கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தளிலும் திமுகவை மட்டுமே விஜய் விமர்சித்து வருகிறார்.. அதிமுக என்ற பெயரையோ அல்லது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரையோ முற்றிலுமாகத் தவிர்க்கிறார். இது தவெகவுக்கு பலன் தருமா அல்லது தாராபுரம் போன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் என்னவாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜகவை பார்த்தால் பயமா?
பேசியது நயினார் நாகேந்திரன்தானே
மோடி, அமித்ஷா