தாராபுரம் இடைத்தேர்தல்.. ரூ.16.40 கோடி சொத்துக்களுடன் டாப்பில் நிற்கும் தவெக வேட்பாளர் சத்தியபாமா!

  • திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளரான சத்தியபாமா சொத்து மற்றும் குற்ற வழக்குகள் இரண்டிலும் முதலிடம் பிடித்துள்ளார். சத்தியாபாமா வசம் மொத்தமாக ரூ.16.40 கோடி சொத்துகளும், 3 குற்ற வழக்குகளும் இருக்கின்றன. 2வது இடத்தில் அதிமுக வேட்பாளர் ரூ.5.96 கோடியுடன் பானுமதி இருக்கிறார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் முடிவடைந்துவிட்ட சூழலில், நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதன்படி தாராபுரம் தொகுதியில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

    Advertisement

    தவெக சார்பாக சத்தியபாமா, திமுக சார்பாக சுகன்யா, அதிமுக சார்பாக பானுமதி, நாதக வேட்பாளராக கார்த்திகா, சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் என்று மொத்தமாக 22 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுவை திரும்ப பெற நாளை கடைசி நாளாகும். இந்த நிலையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் மற்றும் குற்ற வழக்கு விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    தாராபுரம் தொகுதி வேட்பாளர்களில் இந்த இரண்டிலும் தவெக வேட்பாளர் சத்தியபாமா தான் முதலிடத்தில் இருக்கிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமா வசம் ரூ.1.71 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன. மொத்தமாக ரூ.16.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சத்தியபாமா பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சத்தியபாமா பணக்கார வேட்பாளராக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த பட்டியலில் அதிமுக வேட்பாளர் பானுமதி ரூ.5.96 லட்சம் மதிப்பிலான சொத்துக்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் சுகன்யா ரூ.44 லட்சம் மதிப்பிலான சொத்துக்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இவரின் வயது 34 ஆகும். சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் வசம் எந்த சொத்துக்களோ, வாகனங்களோ இல்லை.

    அதேபோல் குற்ற வழக்குகளை பொறுத்தவரை சத்தியாபாமா மீது 3 குற்ற வழக்குகள் உள்ளன. நாதக வேட்பாளர் கார்த்திகா மீது ஒரு குற்ற வழக்கு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சாமானியர்களை சட்டசபைக்கு அழைத்து வந்துள்ளோம் என்று பேசி வந்த தவெக, தற்போது பணக்கார வேட்பாளரை களமிறக்கி இருப்பது அக்கட்சியினர் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது.

    English Summary

    Dharapuram Bypoll: TVK Candidate Sathyabama Declares Highest Net Worth of ₹16.4 Crore and 3 Cases