ஊரில் விஜய் இல்லாத நேரம்.. இங்கே என்னென்ன நடக்குது பாருங்க.. தாராபுரத்தில் வைட்டமின் “ப”? பலே தவெக

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தவெக தரப்பில் தேர்தல் பணிகளை வேகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. காரணம், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள முதல் பெரிய அரசியல் மதிப்பீடாக அது அமையும் என கட்சி வட்டாரத்தில் கணக்கு போடப்படுகிறது. அதனால்தான், இதற்கான வியூகங்கள், விஜய் லண்டன் சென்றுள்ள நிலையிலும் தொடர்ந்து வகுக்கப்பட்டு வருகின்றனவாம்.. இதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் கைப்பற்றுவதுதான், விஜய்யின் தவெக ஆட்சியின் 100 நாட்களுக்கு மக்கள் "பாஸ் மார்க்" வழங்கியிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் என்கிற திட்டத்தில் வெற்றிக்கான வியூகங்களை போடத் தொடங்கியுள்ளனர் விஜய்யின் ஆலோசகர்களும், அமைச்சர்களும்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம்

    முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டு விட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மொத்த வாக்காளர்களில் 1000 வாக்குகளுக்கு ஒரு டீம் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக களமிறக்கிய திட்டத்தின் பாணியை கையிலெடுக்கிறார்கள்.

    வைட்டமின் "ப" இறங்குதா

    சட்டமன்றத் தேர்தலில் 90 சதவீத தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பர்ச்சேஸ் செய்யும் வழிகளில் தவெகவினர் இறங்கவில்லை. ஆனால், இடைத்தேர்தலில் அப்படியிருக்க முடியாது. வைட்டமின் (ப) இறக்கியே ஆக வேண்டும் என்ற திட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்குமான செலவின பட்டியலை போட்டு வருகிறது ஆதவ் அர்ஜுனா டீம் !

    Advertisement

    இந்த நிலையில், "தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் வர வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் வராமலே ஜெயிப்பது உங்களின் மக்கள் செல்வாக்கை எதிரிகளுக்கு உணர்த்தலாம்" என விஜய்யிடம் அமைச்சர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

    ரோட் ஷோ ரெடியாகிறதா

    ஆனால், விஜய் இதனை ஏற்க மறுத்து விட்டாராம்.. "தேர்தல் பிரச்சாரத்துக்கு நீங்கள் போகாமல் இருந்தால் அது மக்களிடம் எதிர்மறையாக எதிரொலிக்க செய்யும். "திமிர்" என்று எதிரிகள் தேர்தல் களத்தில் விமர்சிப்பார்கள். அதனால், ஒரு தொகுதிக்கு ஒரு நாள் என 2 நாள் தேர்தல் களத்துக்கு நீங்கள் வர வேண்டும். அதனை ரோட் ஷோ மாதிரியிலான பிரச்சாரமாக இருந்தாலும் ஓ.கே. அல்லது பொதுக்கூட்டம் வாயிலான பிரச்சாரமாக இருந்தாலும் ஓகே ! ஆனால், நீங்கள் பிரச்சாரம் செய்வது தான் சரியாக இருக்கும்" என்று ஆலோசகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    Advertisement

    உடனே ஆலோசகர்களின் இந்த ஐடியாவை விஜய் ஏற்றுக்கொண்டு விட்டார்.. அதனால்தான், அமைச்சர்கள் சொன்ன யோசனையையும் அவர் நிராகரித்திருக்கிறார்" என்கிறார்கள்.

    கூட்டணி கட்சி தலைவர்கள்

    இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் தலா ஒரு நாள் பிரச்சாரம் மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனியாக பிரச்சாரம் செய்வதைவிட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசகர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம்.

    இதனால், விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 2 தொகுதிகளிலும் வெற்றியைப் பெறுவதற்கான அமைப்பு ரீதியான பணிகள் ஒருபுறம் வேகம் பெறும் நிலையில், இன்னொருபுறம், விஜய்யின் நேரடி பிரச்சாரத்தை மையப்படுத்தி கூட்டணி அரசியலையும் களத்தில் வலுப்படுத்த தவெக தயாராகி வருகிறது.

    Advertisement

    இந்த இடைத்தேர்தல் முடிவு, இரண்டு தொகுதிகளின் வெற்றி, தோல்வியைத் தாண்டி, விஜய்யின் தவெக ஆட்சிக்கு கிடைக்கும் முதல் முக்கியமான மக்கள் மதிப்பீடாக அமையுமா என்பதே அரசியல் வட்டாரத்தின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Dharapuram Bypoll.. Vijay in London as TVK Plans Vitamin P Strategy.. What Is Happening on the Ground?