துருவ் விக்ரம் இன்னும் பேசவே ஆரம்பிக்கல.. அனுபமா பரமேஸ்வரன் அசிங்கப்படுத்துறாரே.. டாக்ஸிக் டார்ச்சர்

  • சென்னை: துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இடையேயான காதல் முறிவு குறித்து மீடியாக்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகை அனுபமா முன்வைக்கும் டாக்சிக் டார்ச்சர் குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சேகுவேரா ஜெய்சங்கர் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காதலை கொச்சைப்படுத்தாமல் பிரிந்து செல்வதே பண்பாடு என்றும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    Advertisement

    The Gentlemen சேனலில் பேசியிருக்கும் சேகுவேரா, "நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இடையேயான காதல் விவகாரம் குறித்து மீடியாக்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. துருவ் விக்ரமுக்கு இது சோதனை காலமா தெரியவில்லை.. துருவ் விக்ரம் தன்னை 2 ஆண்டுகளாகக் கடுமையான மன உளைச்சலுக்கும், டாக்சிக் டார்ச்சர் எனப்படும் நச்சுத் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியதாக அனுபமா குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    துருவ் விக்ரம்

    பகலில் ரெமோ போல அன்பாக நடந்துகொள்ளும் துருவ், இரவில் அன்னியன் போல மாறி வன்முறையாக நடந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னியன் படத்தில் பனிக்கட்டி அறையை உடைத்துக்கொண்டு வெளிவரும் மிருகத்தனமான கேரக்டரை போலத் துருவ் நடந்து கொண்டாரோ என்ற கேள்வி எழுகிறது.

    காதலிக்கும் காலத்தில் அநியோன்யமாக இருந்துவிட்டு, பிரிவுக்கு பிறகு ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாகப் பழிசுமத்துவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி, காதலித்த நபரை இப்படிப் பொதுவெளியில் களங்கப்படுத்தக் கூடாது.

    டாக்ஸிக் டார்ச்சர்

    அன்னியன் படத்தில் அம்பி, ரெமோ, அன்னியன் என 2 கேரக்டர்கள் உண்டு. ஆனால் அனுபமாவின் கூற்றுப்படி, அவருடைய வாழ்க்கையில் சாதுவான அம்பி கேரக்டர் வரவே இல்லை.. ரெமோவும் அன்னியனும் மட்டுமே இருந்துள்ளனர்.

    Advertisement

    அனுபமா சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் துருவ் விக்ரம் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து போகிறார். உடை அணிவது தொடர்பான கட்டுப்பாடுகளை துன்புறுத்தல் எனக் அனுபமா குறிப்பிடுவதும் மிக சிறுபிள்ளைத்தனமானது... காதலின் தொடக்கத்தில் காதலன் சொல்வதை விரும்பிச் செய்யும் நபர்கள், கருத்து வேறுபாடு வந்தவுடன் அதையே பெரிய குற்றச்சாட்டாக மாற்றுகிறார்கள்..

    அனுபமா பரமேஸ்வரன்

    ஆதம்பத்தில் தேனாய் இனிப்பதும், பிறகு தேள் போல கொட்டுவதும்தான் எதார்த்த நிலை. இன்றைய தலைமுறையினரிடம் காதலையும் காமத்தையும் முதிர்ச்சியோடு கையாள்வதற்கான உளவியல் பக்குவம் இல்லை. அவசரப்பட்டு டேட்டிங் செல்வதும், லாட்ஜ்களில் தங்குவதும், பின்னர் பிரிவு வந்தவுடன் 2 ஆண்டுகள் துன்புறுத்தலை அனுபவித்ததாக சொல்வதும் நியாயமற்றது.

    Advertisement

    பிரிய நினைப்பவர்கள் அமைதியாக விலகிச் செல்ல வேண்டுமே தவிர, கடந்த கால உறவையும் நபரையையும் கொச்சைப்படுத்தக் கூடாது. ஏனென்றால் காதலனை அசிங்கப்படுத்தும்போது, அந்த உறவும் சேர்ந்தே களங்கப்படுகிறது.

    அடுத்த காதலா?

    "என்னை லவ் பண்ணவன் எனக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்தான், இனிமே அவன் எந்த பொண்ணுகிட்டயும் மாட்டிடக் கூடாது" என்று பகிரங்கமாக ஸ்டேட்மென்ட் கொடுப்பது முற்றிலும் தவறான செயலாகும். ஒரு வாழ்க்கை கைநழுவிப் போனாலும் அடுத்து இன்னொரு வாழ்க்கை நிச்சயம் இருக்கிறது. துருவ் விக்ரமிற்கு அனுபமா இல்லை என்றால் அவர் வேறொரு வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிடுவார்; அதேபோல அனுபமாவிற்கும் நிச்சயம் வேறொரு நபர் வரத்தான் செய்வார்.

    Advertisement

    "நான் துருவிடம் இருந்து முற்றிலும் விலகிவிட்டேன், 2 வருட டார்ச்சரிலிருந்து வெளியே வந்து இப்போது நான் ஃப்ரெஷ் ஆகிவிட்டேன், என்னுடைய அடுத்த காதலுக்கு நான் தயார்" என்பதை ஊடகங்கள் மூலமாக உலகிற்குத் தெரியப்படுத்துவதற்காகவே இதுபோன்ற பேட்டிகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள்.

    துருவ் விக்ரம் இன்னும் பேசவே ஆரம்பிக்கல

    "ஆகாதவன் கை பட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம்" என்ற மனநிலையே இங்கு வெளிப்படுகிறது. விவாகரத்து என்பது சட்டப்பூர்வமான நடைமுறை// ஆனால் காதல் முறிவு என்பது எந்தவொரு சட்டப் பூர்வாங்க நடைமுறையும் இல்லாத எளிதான விலகல். அதை ஊடகங்கள் வரை கொண்டு சென்று பெரிதாக்கத் தேவையில்லை.

    Advertisement

    ஒருவேளை துருவ் விக்ரமும் பதிலடி கொடுக்கத் தொடங்கினால் நிலைமை மேலும் மோசமடையும். சினிமாவில் இன்னும் பெரிதாக எதையும் சாதிக்காத இளம் நடிகர்கள், இது போன்ற தனிப்பட்ட விவகாரங்களை ஊடகங்களுக்கு விவாதப்பொருளாக மாற்றுவது, ஒட்டுமொத்த சினிமா துறைக்கே தேவையற்ற அசிங்கத்தை ஏற்படுத்துகிறது." என்றெல்லாம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

    English Summary

    Dhruv Vikram Has Not Even Responded Yet.. Anupama Parameswaran’s Love Controversy