தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்

  • சென்னை: தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக பெண்களை விட ஆண்களிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதும், நகர்ப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுவதும் கவலை அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தற்போதைய நவீன உலகில் மக்கள் சந்தித்து வரும் மிகப் பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக கருதப்பட்ட சர்க்கரை நோய், இன்று வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.

    Advertisement

    மக்களின் வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் ஆகியவையே இந்த சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இது ஒரு நாட்பட்ட நோய் என்பதால், முறையான கவனிப்பு இல்லையென்றால் காலப்போக்கில் உடல் உறுப்புகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வசதிகள், சுகாதாரம் ஆகியவை பற்றி சர்வே நடத்தி வெளியிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வே விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    Advertisement

    இதில் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களின் விவரங்களை பாலின ரீதியாகவும் ஊரகம், நகரம் என இருப்பிட வாரியாகவும் பிரித்து காட்டியுள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    பெண்கள்:

    141-160 mg/dl (உயர்ந்த சர்க்கரை அளவு)

    நகர்ப்புறம்: 9.1%
    கிராமப்புறம்: 8.1%
    மொத்தம்: 8.5%

    160 mg/dl-க்கு மேல் (மிக அதிக சர்க்கரை அளவு)

    நகர்ப்புறம்: 15.9%
    கிராமப்புறம்: 12.6%
    மொத்தம்: 14.0%

    140 mg/dl-க்கு மேல் அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள்

    நகர்ப்புறம்: 27.9%
    கிராமப்புறம்: 23.0%
    மொத்தம்: 25.2%

    ஆண்கள்:

    141-160 mg/dl (உயர்ந்த சர்க்கரை அளவு)

    நகர்ப்புறம்: 9.2%
    கிராமப்புறம்: 9.1%
    மொத்தம்: 9.1%

    160 mg/dl-க்கு மேல் (மிக அதிக சர்க்கரை அளவு)

    Advertisement

    நகர்ப்புறம்: 16.6%
    கிராமப்புறம்: 14.1%
    மொத்தம்: 15.3%

    140 mg/dl-க்கு மேல் அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள்

    நகர்ப்புறம்: 28.4%
    கிராமப்புறம்: 25.3%
    மொத்தம்: 26.7%

    கடந்த 2019-21 ஆண்டு தரவுகள்

    பெண்கள்:

    141-160 mg/dl (உயர்ந்த சர்க்கரை அளவு)-7.5%

    160 mg/dl-க்கு மேல் (மிக அதிக சர்க்கரை அளவு)- 11.1%

    140 mg/dl-க்கு மேல் அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள்-20.7%

    ஆண்கள்:

    141-160 mg/dl (உயர்ந்த சர்க்கரை அளவு)-8.1%

    160 mg/dl-க்கு மேல் (மிக அதிக சர்க்கரை அளவு)-11.9%

    140 mg/dl-க்கு மேல் அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் -22.1%

    Advertisement

    இதன்படி பார்க்கும் போது கடந்த 2019 -21 ஆம் ஆண்டை விட தற்போது ஆண்கள் 4 சதவீதமும், பெண்கள் 5 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Diabetes in Tamil Nadu: A recent Health Ministry survey shows that diabetes prevalence in Tamil Nadu has increased compared to previous years. Men are more affected than women, while urban areas report higher cases than rural regions. Lifestyle changes, obesity, and lack of physical activity remain key factors.