சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், தவெக பக்கம் வந்த பின்னரும் திமுக-அதிமுக கூட்டணி அமைக்க அழைப்பு வந்ததா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். இதற்கு திருமாவளவன் அளித்த பதில் கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் விஜய் முதலமைச்சராக 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதால், விஜய்க்கு முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று சொல்லி இடதுசாரிகள் விஜயக்கு சப்போர்ட் செய்தனர். பின்னர் ஐயுஎம்எல் வந்தது. இப்படியாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்த நிலையில் இறுதியாக திருமாவளவனும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து தவெகவுக்கு அதரவு பலம் 13ஆக அதிகரித்தது. பின்னர் விஜய் முதலமைச்சரானார். ஆனால், திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்று சொல்லி திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை சமீபத்திய பேட்டியில் திருமாவளவனும் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், தவெகவுக்கு ஆதரவு அளித்த பின்பும்.. திமுக-அதிமுக கூட்டணிக்கு அழைப்பு வந்ததா என செய்தியளார்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், "யார் யாரோ இதற்காக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவரவர் ஆசையை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை. இப்படி செய்வோம் என்று அழுத்தம் கொடுத்தும், குறிப்பிட்ட தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாகவும் என்னை அணுகவில்லை. இடையில் உள்ள நலன் விரும்பிகள் பேசி வந்தார்கள். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெக ஆட்சியமைப்பதில் தவறு இல்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்துவிட்டோம். 8ம் தேதி கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுத்தது. ஆனால் அவர்கள் முடிவெடுத்த உடனேயே நாங்களும் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வது பொறுத்தமற்றது. ஏனெனில் எங்களுக்கு என தனி கட்சி இருக்கிறது. எனவே அதில் பேசிதான் எங்களால் முடிவெடுக்க முடியும். 8ம் தேதி கம்யூனிஸ்ட்கள் முடிவெடுப்பார்கள். 9ம் தேதி காலை நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம் என்று சொல்லியிருந்தோம். ஆனால், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அவர்களுக்கு வயிற்று வலி என்று வருகிறார்கள். அதற்கான மருந்தை தயாரிக்க வேண்டும். மருந்து தயாரிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். அதனால்தான் தாமதம் ஏற்பட்டது. அனால் அதற்குள் விசிக பேரம் பேசுகிறது என்றும், ஆதரவு தெரிவிப்பதற்காக பிரதிபலன்களை எதிர்பார்க்கிறது என்றோ சொல்வது அபத்தமான குற்றச்சாட்டு" என்று கூறியுள்ளார்.முதலமைச்சராக விஜய்
திருமாவளவன் விளக்கம்
தவெக ஆதரவு
பேரம் பேசியதாக அவதூறு