இளையராஜா காப்பிரைட்டுக்கு போராடுவதை கருப்பு படத்தில் கிண்டல் செய்த ஆர்ஜே பாலாஜி? எழும் எதிர்ப்பு

  • சென்னை: கருப்பு படத்தில் இளையராஜா காப்பிரைட்டுக்கு போராடுவதை கிண்டல் செய்து காட்சி வைத்துள்ளதாக இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி மீது நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதன்படி அதாவது ஒருவேளை இளையராஜா வழக்கு போட்டால், அதுவும் படத்தோட பப்ளிசிட்டிக்கு யூஸ் ஆகும்னு நினைச்சிருக்கலாம் என்று இளையராஜா ஆதரவாளர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இப்ப கருப்பு படத்தை Xல அப்லோடு பன்ணினா, RJB பாலாஜி டீம் அதைய ரிப்போர்ட் பண்ணி காப்பிரைட் நோட்டீஸ் கொடுப்பாங்களா இல்ல ஜாலியா இருப்பாங்களான்னு தெரியவில்லை என்றும், தங்களோட துறைல இருக்குற ஒருத்தர் அவரோட நியாயத்துக்காக கோர்ட்ல போராடினாக்கூட அதைய சினிமாத்துறைல இருக்கறவங்க நக்கல் தான் அடிக்கறாங்க என்றும் நெட்டிசன் ஒருவர் காட்டமாக கூறியிருக்கிறார்.

    Advertisement

    இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், கருப்பு திரைப்படக் குழு இளையராஜா அவர்களை கேலிச் செய்யும் வகையில் அமைத்துள்ள காட்சியை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இத்தகைய செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். இளையராஜா அவர்களின் அனுமதியின்றி அவரின் பாடல்களை பயன்படுத்தக்கூடாது என அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பும், காப்புரிமை சட்டமும் வழங்கியுள்ள சட்டப்பூர்வமான உரிமையாகும்.

    ஒரு இசையமைப்பாளரின் படைப்பு என்பது அவரது அறிவுசார் சொத்து. அந்த பாடல்களை பொது நிகழ்வுகள், திரைப்படங்கள் அல்லது வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தும்போது உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்பதே காப்புரிமை சட்டத்தின் அடிப்படை. அத்தகைய சட்டப்பூர்வமான உரிமையை பாதுகாக்கும் நிலைப்பாட்டை கேலி செய்யும் போக்கில் காட்சிகளை அமைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    Advertisement

    மேலும், கலைச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு தனி நபரை குறிவைத்து தவறான புரிதலை உருவாக்கும் வகையிலான காட்சிகளை அமைப்பது பொறுப்பற்ற அணுகுமுறையாகும். அதனை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதும் கண்டனம் தெரிவிப்பதும் சமூகத்தின் பொறுப்பான எதிர்வினையாகும்" இவ்வாறு கூறியுள்ளார்.

    அதேபோல் சிலர் இசைஞானி இளையராஜா அவர்களை கேலிச் செய்யும் வகையில் அமைந்துள்ள காட்சியை நீக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யை எக்ஸ் தளத்தில் டேக் செய்து கோரிக்கை வைத்துள்ளனர்.

    English Summary

    Netizens are accusing director and actor RJ Balaji of mocking Ilayaraja's fight for copyright in the film Karuppu.