கரூர் போலீஸ் அலர்ட் செய்யவில்லையா... விஜய் குற்றச்சாட்டுக்கு வீடியோ போட்டு பதில் தந்த திமுக

  • சென்னை: காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார் என்று திமுக ஐடி விங்க் கேள்வி எழுப்பி உள்ளது. முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்து பேசுவதையும், அதற்கு முன்பு கரூர் டிஎஸ்பி அன்று என்ன கூறினார் என போலீஸ் உயர் அகிகாரிகள் பேசியது என்ன என்பதையும் இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்து அளித்த விளக்க வீடியோவில் கூறும் போது, "நாமக்கல்லில் மீட்டிங் முடிந்துவிட்டு வரும் போது, கரூர் போலீஸ் எங்களை அலர்ட் பண்ணியிருக்கலாம் அல்லவா.. இங்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது.. கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.. வராதீங்க.. போலீஸ் நினைத்தால் மீட்டிங்கையே கேன்சல் செய்திருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் காவல் துறை உயர் அதிகாரி பேசிய வீடியோவை இணைத்துள்ளது. அந்த வீடியோவில் காவல் அதிகாரி பேசுகையில், "டிஎஸ்பி கரூர் மேம்பாலத்தில் இருந்து , பேசிய இடம் வரை, அவர் தான் டீமுடன் பேசி பேசி கூட்டி சென்றார். ஒரு 50 மீட்டருக்கு முன்னாடியே நின்று பேசுங்கள் என்று விஜய் தரப்பிடம் கரூர் டிஎஸ்பி கூறியிருக்கிறார். சார் இங்கு நிறுத்திக் கொள்ளலாம்.. இதற்கு மேல் வேண்டாம்.. கூட்டம் ஜாஸ்தியாக இருக்கிறது. இங்கு வைத்தே பேசலாம் என்று கூறியிருக்கிறார்.

    ஆனால் அதற்கும் ஆர்கனைசர்கள் மறுத்துள்ளார்கள்.. இல்லை, நாங்கள் அந்த பாயிணிடிற்கு தான் போக வேண்டும்... இங்கிருந்து பேசினால் கவரேஜ் நன்றாக கிடைக்காது.. இங்கிருந்தால் மைக் கேட்காது என்றார்கள்.அதனால் தான்அந்த வண்டியை கொஞ்சம் கொஞ்சமாக புஷ் செய்து, கூட்டத்தை இரண்டு பக்கமும் நகர்த்தி கொண்டு வந்துள்ளார்கள்" இப்படி கூறியிருந்தார். இந்த வீடியோவைஇணைத்துள்ள திமுக ஐடி விங்க், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

    Advertisement

    அதேபோல் திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோ, முதல்வர் விஜய் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இருந்தது. கரூர் சம்பவத்தில் வலியுடன் இருந்த என்னை, ஓடி ஒளிந்துவிட்டான் என்று கூறுவீர்களா? என் வாய் சார் இது என்பதாக விஜய் கடுமையாக கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதற்கு திருச்சி ஏர்போர்டில் விஜய்யிடம் 30 பேர் செத்துட்டாங்களாம் சார்.. பதில் சொல்லுங்க என்று செய்தியாளர்கள் கேட்பதும், அப்போது விஜய் எந்த பதிலும் அளிக்காமல் சென்றதும் வீடியோவாக செய்தி ஊடகங்களில் வந்திருந்தது. அதனை எடுத்து திமுக ஐடிவிங்க் பதிவிட்டதுடன், அன்று நீங்கள் நீங்க ஓடி தான் போனீங்க. CM அங்கிள்! என்று குற்றம்சாட்டியுள்ளது.

    English Summary

    Did the Karur police fail to issue an alert? DMK responds to Vijay's allegation by releasing a video.