சென்னை: இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மரகதம் குமராவேல் மற்றும் சத்யபாமா இருவரும் கடந்த திங்கள் கிழமை, பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்புப் பிரமானமும் செய்து வைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் தவெக, திமுக, அதிமுக என கடுமையான மும்முனைப் போட்டி நிலவியது.
பி. சத்தியபாமா (தவெக): 66,841 வாக்குகள் (வெற்றி) கே. மரகதம் குமரவேல் (தவெக): 72,240 வாக்குகள் (வெற்றி) இந்த நிலையில் இவர்களுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்புப் பிரமானமும் செய்து வைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். இந்த நிகழ்வில் தவெக அமைச்சர்கள், தவெக கட்சியில் அண்மைக் காலங்களில் இணைந்த அதிமுகவின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், தவெக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். கட்சிகளின் அமைச்சர்களோ, அக்கட்சிகளின் நிர்வாகிகளோ கலந்து கொள்ளவில்லை. இந்த சம்பவம், தவெக கட்சியில் சலசலப்பை உருவாக்கியது என்கிறார்கள். சபாநாயகர் கூட, இது குறித்து அவர்கள் வரவில்லையா? என்று அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேட்டிருக் கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பேசு பொருளானது. ஏன், இவர்கள் கலந்துகொள்ளவில்லை? காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரின் பதவி விலகலை வலியுறுத்தியும். எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகிறது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள். திங்கள் கிழமை, உச்சநீதிமன்றத்தை நோக்கி இத்தகைய போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்தது. இதில் பங்கேற்க குறிப்பாக காங்கிரஸ் தரப்பில் அதிக எண்ணிக்கையில் கூட்டத்தைக் கூட்டி காட்ட வேண்டும் என்கிற ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ. க்கள், எம்.பி.க்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் டெல்லியில் 3 முதல் 5 நாள் இருக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டிருந்தது. அதன்படி இந்தியா முழுவதும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் டெல்லியில் திரண்டிருந்தனர். அதாவது ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் குறைந்த பட்சம் 1000 காங்கிரசார் டெல்லிக்கு வர வேண்டும் என்பது இலக்கு. அந்த வகையில் தான், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் ஞாயிற்றுக் கிழமையே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டனர். கட்சியின் முக்கியஸ் தர்கள் யாரும் சென்னையில் இல்லை. அதனால் தான், தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பில் காங்கிரசார் கலந்து கொள்ளமுடியவில்லை. அதனால், நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்தது என்பது தவறானது. நிகழ்ச்சியை காங்கிரஸ் புறகணிக்கவில்லை. அதேபோல, டெல்லிக்கு எல்லோரும் செல்ல வேண்டியதிருந்ததால், தமிழகம் முழுவதும் நடத்தவிருந்த போராட்டத்தை யும் காங்கிரஸ் ஒத்தி வைத்ததது என்று தெரிவிக்கின்றனர். - சிறப்பு நிருபர் எழில்தாராபுரம் தொகுதி இறுதி நிலவரம்:
எஸ். சுகன்யா (திமுக): 57,370 வாக்குகள் (இரண்டாம் இடம்)
க. பானுமதி (அதிமுக): 45,280 வாக்குகள் (மூன்றாம் இடம்)
கார்த்திகா (நாம் தமிழர் கட்சி): 5,268 வாக்குகள்
லட்சுமணன் (சிபிஐ): 1,157 வாக்குகள்மதுராந்தகம் தொகுதி இறுதி நிலவரம்:
இ. பரந்தாமன் (திமுக):*52,098 வாக்குகள் (இரண்டாம் இடம்)
எஸ். கணிதா சம்பத் (அதிமுக): 46,356 வாக்குகள் (மூன்றாம் இடம்)
ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி): 2,298 வாக்குகள்
பி. சுகந்தி (சிபிஎம்): 1,701 வாக்குகள்