சென்னாங்குனி பிடிக்க லண்டன் போகணுமா? திமிங்கலம் எங்கே? முதலீடை கிண்டலடித்த தேவசகாயம்! விஜய்க்கு செக்

  • சென்னை: லண்டன் சென்று முதலமைச்சர் விஜய் இவ்வளவுதான் முதலீடு ஈர்த்தாரா? மெரினா கடற்கரையின் பூர்வகுடி மீனவர்களை நம்பவைத்து ஏமாற்றுவது மாபெரும் நம்பிக்கை துரோகம். கடலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை சென்னை மக்களும் மீனவர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தலைமைச்செயலகம் பட்டினப்பாக்கத்தில் வரவே வராது.. இதில் மீனவர்களுக்குதான் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்.

    Advertisement

    அரசியல் களம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தி பிரிண்ட் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை, தவெக அரசின் 4 மாத கால ஆட்சியை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

    Advertisement

    இந்த அரசு ஒரு முறையான ஆட்சி முறையை வழங்குவதற்குப் பதிலாக, மக்களைக் "கல்ட்" எனப்படும் குருட்டுத்தனமான பின்பற்றுதல் மனநிலையில் வைத்திருக்கவே முயற்சி செய்கிறது.

    தேவசகாயம் கட்டுரை

    பொதுவாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அரசின் அனுபவக் குறைபாடுகள் மற்றும் தவறான முடிவுகளைத் தைரியமாக சுட்டிக்காட்டுவார்கள். இப்போதுள்ள ஆட்சி நிர்வாகத்தை எந்தவொரு ஐஏஎஸ் அதிகாரியும் மனப்பூர்வமாக பாராட்டவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் எப்போதும் நிதானமாகவும் விளம்பர வெளிச்சம் இல்லாமலும் செயல்படுவார்கள். ஆனால் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் நெருக்கம் காட்டி, தவறான யோசனைகளைக் கொடுத்து நிர்வாகத்தை சொதப்புவது அதிகம்.

    தேவசகாயம், பாலசந்திரன், பொன்மாணிக்கவேல், சகாயம் போன்ற ஓய்வுபெற்ற அதிகாரிகள் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் அரசின் தவறுகளை தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement


    பரந்தூர், சிப்காட்

    பரந்தூர் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதே இடத்தில் சிப்காட் அல்லது பொல்யூஷன் உண்டாக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படத்தான் செய்யும்.

    அதேபோல் மெரினா கடற்கரையின் பூர்வகுடி மீனவர்களை நம்பவைத்து ஏமாற்றுவது மாபெரும் நம்பிக்கை துரோகம். கடலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை சென்னை மக்களும் மீனவர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தலைமைச்செயலகம் பட்டினப்பாக்கத்தில் வரவே வராது.. இதில் மீனவர்களுக்குதான் வெற்றி கிடைக்கும்.

    தென்னகக் கடலில் ஒரு செங்கல் கூட இறக்க முடியாது. மீறி அதிகாரத்தைப் பயன்படுத்தி லத்தி சார்ஜ் செய்தால், அதில் பாதிக்கப்படப்போவது மீனவர்களும் போலீசாரும் ஆகிய தமிழ்நாட்டின் சாமானிய மக்கள்தான். அரசியல்வாதிகள் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று யோசிக்காமல், மக்களின் மொழியைப் பேசுகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

    Advertisement

    ஜோசியரின் பேச்சைக் கேட்டு

    ஜோசியரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, வீட்டின் கதவைத் திறந்தால் கடல் தெரிய வேண்டும், செக்ரட்டரியேட் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்தில் நிர்வாக முடிவுகளை எடுக்கக் கூடாது. ஜோசியம் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளை வைத்து முடிவுகளை எடுப்பது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒருபோதும் நன்மையைத் தராது. ஜோதிடர் பேச்சை கேட்டு, முதலமைச்சர் ஒரு அடி முன்னே எடுத்து வைப்பதாக நினைத்தால், அரசியல் ரீதியாக அவரது பிம்பம் 2 அடிகள் பின்னோக்கித்தான் இறங்கும்..

    மக்கள் கேட்கும் வீடு, மருத்துவமனை, பள்ளி போன்ற அத்தியாவசியத் தேவைகளை கட்டி தராமல் அரசு தன் இஷ்டத்திற்கு செயல்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், பால் வியாபாரிகளை கண்டுக்கவே இல்லை..

    Advertisement

    அரசு ஊழியர்கள் கொத்து கொத்தாக விசிலுக்கு போட்டார்களே, அவர்களையும் கூப்பிட்டு இதுவரை பேசவில்லை.. மாணவர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்போ, பெண்கள் பாதுகாப்போ இல்லாத நிலையில் விளம்பரங்களுக்கு மட்டும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

    லண்டன் முதலீடு

    லண்டன் சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக நாடகமாடி, நாலைந்து நபர்களை வைத்துப் போலியான செட்டிங் செய்துவிட்டுத் தப்பித்து ஓடியுள்ளனர். கேள்வி கேட்கும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கண்டாலே ஓடிவிட்டு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

    தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்ததாக சொல்கிறார்.. ஆனால், முதலமைச்சர் விஜய் லண்டன் வரை சென்று வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே கொண்டு வந்துள்ளார்.

    Advertisement

    சென்னாகுன்னி - திமிங்கலம்

    இத்தனைக்கும் முதலமைச்சருடன், அஜித் சார், இன்னொரு நடிகை இவங்க எல்லாருமே சேர்ந்தே இவ்வளவுதான் முதலீடு.. அதிலும் முக்கால்வாசி இந்தியா கம்பெனிகள்தான். அதனால் 1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்த கீர்த்தனாவிடம் விஜய் பயிற்சி பெற வேண்டும்.

    லண்டன் வரை சென்று வெறும் 15000 கோடி ரூபாயைக் கொண்டு வந்தது மிகவும் குறைவானது. பெரிய திமிங்கலம் மற்றும் சுறா மீன்களை பிடிக்காமல் சென்னாங்குனி, நண்டு, தவளை போன்ற சின்ன சின்ன விஷயங்களைப் பிடித்து வந்தது போல் உள்ளது.. ..

    எச்சிஎல், இன்போசிஸ், விப்ரோ, டிவிஎஸ், ஐடிசி போன்ற மாபெரும் இந்திய நிறுவனங்களும், சந்திரசேகரன், சிவநாடார், ஸ்ரீதர் வேம்பு, சுந்தர் பிச்சை போன்ற உலகளாவிய தொழிலதிபர்களும் இருக்கும்போது அவர்களைச் சென்று சந்திக்கவில்லை.

    நோக்கியா, ஃபோர்டு போன்ற புதிய நிறுவனங்களை முதன்முதலில் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவராமல், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் பழைய நிறுவனங்களின் தொழில் விரிவாக்கத்தை மட்டுமே புதிய முதலீடாகக் காட்ட முயல்கிறார்கள்" என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.

    English Summary

    Did Vijay Go to London to Catch Small Fish? Devasahayam Mocks Tamil Nadu Investment Trip.. Why?