சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்புதான் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசியிருந்தது சோஷியல் மீடியாவில் பேசுபொருளானது.. இந்நிலையில், தனது பேச்சில் "செருப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்தியது யாரையேனும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக மனம் வருந்துவதாக லியோனி தெரிவித்துள்ளார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழா 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி பேசியது இணையத்தில் பெரும் வைரலானது.
லியோனி அப்போது பேசும்போது, "அன்று ராமனுடைய செருப்பு எப்படி அயோத்தியை ஆண்டதோ, அதேபோல நீங்கள் (ஸ்டாலின்) கழற்றி வைத்த செருப்புதான் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால், உங்களுடைய திட்டங்களால் மக்கள் இன்னமும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், அறிவுலகத் திறப்பு, மெட்ரோ ரயில் பயணம் எனப் பல்வேறு திட்டங்களின் பயன்களை அனுபவிக்கும் மக்கள், உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தமிழகத்தில் உங்களுடைய செருப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அதற்காக ஆட்சி செய்பவர் பரதன் என்று நினைத்துவிடாதீர்கள். ராமனுடைய செருப்பு 14 ஆண்டுகள் ஆட்சி செய்ததைப்போல, இந்த ஆட்சி 14 ஆண்டுகள் நீடிக்காது. 14 வாரங்களிலோ, 14 மாதங்களிலோ இந்த ஆட்சிக்கு முடிவுகட்டி, மீண்டும் உதயசூரியனை உதிக்கச் செய்ய வேண்டும்" என்றெல்லாம் பேசியிருந்தார். லியோனியின் இந்த பேச்சும், அவர் முன்வைத்த உதாரணமும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், விவாதத்தையும் உண்டுபண்ணி விடட்து.. இதையடுத்து, சர்ச்சைக்குரிய வார்த்தை பயன்பாடு தொடர்பாகத் இன்று தனது வருத்தத்தை வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் லியோனி பேசும்போது, "என்னுடைய "செருப்பு" என்ற வார்த்தைப் பயன்பாடு பலருக்கு அருவருப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி யாரையும் காயப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்களை நம் மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக சொல்லப்பட்ட ஒரு உதாரணமே தவிர வேறொன்றும் இல்லை. செருப்பு என்று சொன்னதை அருவருப்பான வார்த்தையாக பார்க்கிறார்கள், செருப்பு என்ற வார்த்தைக்கு பாதுகை, மிதியடி, காலனி என்றெல்லாம் பல வார்த்தைகள் உண்டு. எனினும், செருப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியது, பலருக்கும் வேதனையை தந்து விட்டது. யாரும் வருத்தப்படத் தேவையில்லை.. இந்த வார்த்தையோ அல்லது வாக்கியமோ யாரையேனும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியிருந்தால், அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், நல்ல எண்ணங்களை வளர்க்கவும் தொடர்ச்சியாக நான் மேடைகளில் பேசி வருகிறேன்" என்றெல்லாம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் லியோனி
“விஜய் தற்காலிக கவர்ச்சி.. ஆனா திமுகவை அவ்வளவு சீக்கிரத்துல அசைக்க முடியாது” - திண்டுக்கல் லியோனி
செருப்பு என்ற வார்த்தை
ராமனின் பாதுகை அயோத்தியை ஆண்டது போல்! ஸ்டாலினின் செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது! லியோனி சர்ச்சை
மனதார மன்னிப்பு