ராமனின் பாதுகை அயோத்தியை ஆண்டது போல்! ஸ்டாலினின் செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது! லியோனி சர்ச்சை

  • சென்னை: ராமனின் பாதுகை (செருப்பு) அயோத்தியை ஆண்டது போல், தமிழகத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் செருப்புதான் ஆட்சி செய்கிறது என மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் திண்டுக்கல் லியோனி பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    அப்போது திமுக பேச்சாளரான திண்டுக்கல் லியோனி பேசுகையில், ராமனின் பாதுகை (செருப்பு) அயோத்தியை ஆண்டது போல், ஸ்டாலின் அவிழ்த்து வைத்த செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது.

    தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் எல்லா திட்டங்களும் ஸ்டாலின் கொண்டு வந்ததுதான். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம், கோவை பெரியார் அறிவுலகம், விடியல் பயணம் என அனைத்திலும் மக்கள் உங்களை நினைக்கிறார்கள்.

    ஸ்லீப் மோடிலிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர் விஜய்? - உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழகத்தில் உங்களது செருப்புதான் ஆட்சி செய்கிறது. அதற்காக பரதன் இல்லை. 14 ஆண்டுகள் அயோத்தியை செருப்பு ஆண்டது. ஆனால் 14 வாரமோ, 14 மாதங்களிலோ இந்த ஆட்சி முடிவுக்கு வந்து உதயசூரியன் ஆட்சி மீண்டும் வரும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    Advertisement

    முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முன்பே திண்டுக்கல் லியோனி சர்ச்சையாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக ஆட்சி அமைந்தது முதல் திமுக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.

    திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியிருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    மேலும் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், சட்டசபையில் வைத்து விஜய்யின் எலும்பை உடைத்துவிடுவேன் என்றார். இதற்காக அவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, ஒபிஎஸ்.. ஆலோசித்த ஸ்டாலின்.. 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக
    Advertisement

    இதையடுத்து காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் போராட்டம் நடத்திய போது ஒரு நடிகையின் பெயரை கூட்டத்திலிருந்தவர்கள் சொன்ன போது அந்த நடிகையை இரட்டை அர்த்தம் வரும் வகையில் விமர்சித்ததாக உதயநிதியை கைது செய்த போலீஸ் தஞ்சாவூர் வரை அழைத்து சென்றது. பிறகு கோர்ட் கண்டித்ததும் ஜாமீன் கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

    இதையடுத்து தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கலந்து கொண்ட போது சத்தியபாமா அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்ல பணப்பெட்டியை வாங்கி கொண்டார் என்பதை குறிப்பிடும் வகையில் பொட்டி பாமா பல்டி பாமாவாகிவிட்டார், அந்த உருவத்தில் அவர் எப்படி பல்டி அடித்தாரோ என ஸ்டாலின், சத்தியபாமாவை உருவக்கேலி செய்யும் விதமாக பேசியிருந்ததற்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    English Summary

    DMK propaganda Dindigul Leoni criticises TVK government as Stalin's sandals are ruling in Tamil nadu like Raman's Paathugai ruled Ayodhi.