வெறுப்பு காட்டும் பொறுப்பு அமைச்சர்? ரீல்ஸ் மட்டுமே போடும் அதிகாரிகள்.. குமுறும் திண்டுக்கல் மக்கள்!

  • சென்னை: எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பருவமழையில் தொடக்கத்திலேயே கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கொடைக்கானல் பகுதிகளில் கடும் சேதாரம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகே ஆய்வுக்கு வந்திருக்கிறார் பொறுப்பு அமைச்சரான விக்னேஷ். ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ஐந்து முறை மட்டுமே திண்டுக்கல்லுக்கு வருகை தந்துள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், திண்டுக்கல்லுக்கு வேறொரு பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் பெரு வெற்றி பெற்றது. ஆனால் திண்டுக்கல்லில் உள்ள 7தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டு, வென்று இருந்தது.

    Advertisement

    ஆத்தூர், ஒட்டன்சத்திரம் தவிர்த்து தவிர்த்து திண்டுக்கல், வேடசந்தூர், பழனி, நத்தம் ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றிக் கோட்டை நெருங்கிலானும் இறுதியில் தோல்வியை தான் சந்தித்தனர்.

    ஆனால் நிலக்கோட்டையில் மட்டும் தமிழக வெற்றி கழக வேட்பாளர். அய்யனார் வெற்றி பெற்றார்.

    திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஆண்டுகளில் இரண்டு அமைச்சர்கள் கூட இருந்திருக்கின்றனர். 2011 அதிமுக ஆட்சியில் விஸ்வநாதனும், அதற்கடுத்து 2016 ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசனும் அமைச்சர்களாக இருந்தனர். 2021 திமுக ஆட்சியில் ஐ.பெரியசாமியும் சக்கரபாணியும் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் என இருந்தனர்.

    Advertisement

    ஆனால் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் திண்டுக்கல்லுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கோவையைச் சேர்ந்த அமைச்சரான விக்னேஷ் திண்டுக்கல்லின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே மாவட்ட செயலாளர் தன்னை மதிக்கவில்லை என நிலக்கோட்டை எம்எல்ஏவான அய்யனார் மன அதிருப்தியில் இருந்து நிலையில் பின்னர் அவருக்கு தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டமான திண்டுக்கல்லுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்படாத அரசு அதிகாரிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி தான் தற்போது திண்டுக்கல் பொறுப்பு அமைச்சரான விக்னேஷின் பக்கம் திரும்பி இருக்கிறது. ஆட்சி அமைந்து ஆறு மாதம் ஆகி விட்ட நிலையில் இதுவரை ஐந்து முறை மட்டுமே திண்டுக்கல்லுக்கு வருகை தந்திருக்கிறார்.

    Advertisement

    1 முறை ஆய்வுக் கூட்டத்தையும், ஒருமுறை ஆய்வைவும் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த மாதம் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அவ, அதற்கு பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே இரண்டு முறை கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டமான திண்டுக்கல்லில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொறுப்பு அமைச்சரான விக்னேஷ் ஒருமுறை கூட ஆய்வு கூட்டத்தை நடத்தவில்லை. குறிப்பாக அடுக்கம் பகுதி மழையால் தனி தீவாக மாறியிருக்கும் நிலையில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    Advertisement
    டாஸ்மாக் கடைகளில் புது ரூல்ஸ்.. பார்களில் சாப்பாடும் கிடைக்குமா? புதிய டெண்டர்: அமைச்சர் விக்னேஷ்

    மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டிய அமைச்சரும் 2 நாட்களுக்குப் பிறகுதான் பெயருக்கு ஆய்வு என இன்று வருகை தந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் அவரும், லோக்கல் திமுகவினர், மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு கல்லா கட்டுவதிலேயே கவனமாக இருக்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்குள் அவரை வரக்கூடாது என மாவட்ட செயலாளர்கள் கட்டம் கட்டி விட்டனர்.

    இதனால் அவரும் மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. தனது தொகுதிகளுக்கு மட்டும் சில பல நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார். கோயம்புத்தூர் போன்ற பெரிய மாவட்டத்தில் இருந்து அமைச்சராக இருக்கும் விக்னேஷ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் கவனித்து வருகிறார். அந்தத் துறையை கவனிப்பதற்கு என்றே அவருக்கு நேரம் சரியாக இருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் பெயருக்கு மட்டுமே தலைகாட்டி வருவதாக குமுறுகின்றனர் பொதுமக்கள்.

    Advertisement
    வெளுத்து வாங்கும் அமைச்சர் விக்னேஷ்! டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த ஆப்பு! 200 கடைகள் இடமாற்றம்! சூப்பர்

    அது மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிரச்சினையை அமைச்சருக்கும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்று அதிகாரிகளும் மன கலக்கத்தில் இருக்கின்றனர். அப்படியே எடுத்துச் சென்றாலும் 'உயர் பொறுப்பில்' இருக்கும் சில அதிகாரிகள் பிறகு பார்க்கலாம் என கூறி விடுகிறார்களாம். மேலும் அவர்களே அமைச்சர்களாக நினைத்துக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் 'ரீல்ஸ்' போட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என தெரியாமல் தவிர்த்து வருகிறார்கள் கீழ்மட்ட அதிகாரிகள்.

    இந்நிலலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, மதுரை போன்ற அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து ஒரு பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும் அல்லது புதுக்கோட்டை போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்து பொறுப்பு அமைச்சரை நியமித்தாலாவது அடிக்கடி வந்து போவார் என குமுறுகின்றனர் மக்கள்.

    English Summary

    Dindigul residents criticize in-charge minister Vignesh over delayed rain damage inspection and demand better government attention to district issues.