தனுஷைப் பார்த்து விஜய்க்கு பயம்! அவர் பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சனையில்லை! அதிமுக மாஜி பளீர்!

  • சென்னை: அதிமுகவும் திமுகவும் தமிழகத்திற்கு சிறப்பான ஒரு ஆட்சியை கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், தனுஷிற்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன ஆகி விட்டது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை முன்னிட்டு அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்களால் 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசம் வழங்கப்பட்டது.

    Advertisement

    இது ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின்போது அதிமுகவின் பொருளாளர் மூலம் வங்கியில் இருந்து மேலாளர் இடம் பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளர் வசம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

    பசும்பொன் தேவர் ஜெயந்தி

    இந்த நிலையில் இன்று மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து மேலாளரிடம் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் மற்றும் திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் வருகை தந்து வங்கி மேலாளர் இடம் தங்கக் கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கினர்.

    Advertisement

    திண்டுக்கல் சீனிவாசன்

    துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு தொடர்ந்து தங்கக் கவசம் பசும்பொன் நோக்கி சென்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்," தமிழ்நாடு காவல்துறை செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இல்லை, தமிழ்நாடு அரசின் செயல்பாடு இல்லை. முதலமைச்சர் ஸ்டிரிக்டாக இருந்ததால் அதிகாரிகள் பயப்படுவார்கள். யாரைப் பற்றியும் பயமும் கிடையாது.

    முதல்வர் விஜய்

    முதலமைச்சர் எதை பற்றியும் அவர் வாயை திறப்பது இல்லை. அவரது அமைச்சர்கள் எதோ பேசுகிறார். காவல்துறை இந்த செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் தான் காரணம் அசுரவேகத்தில் கொலை, கொள்ளை கொள்ளை கற்பழிப்புகள், லஞ்சம் அதிகம் நடப்பது இந்த ஆட்சியில் தான். ஆனால் இதனை கட்டுபடுத்துவதற்குள் இவர் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை.

    Advertisement

    அதிமுக -திமுக

    திமுக 25 ஆண்டுகள், அதிமுக 31 ஆண்டுகள் என திமுக, அதிமுகவும் சிறப்பான ஆட்சிகளை கொடுத்துள்ளோம். ஆனால் இப்போதைய ஆட்சியில் அரிசி, எண்ணெய் என அனைத்துவிலையும் உயர்ந்துவிட்டது. அரிசி பதுக்கல் தொடங்கிவிட்டது. மழை பாதிப்பை நம்ம டிவி பார்ப்பது போலதான் அவர்களும் டிவியை தான் பார்க்கிறார்கள். பேப்பரில் தான் செய்தி வருகிறது. மாற்று நடவடிக்கை இல்லை.

    நடிகர் தனுஷ்

    நடிகர் தனுஷை பார்த்து ஆளும்கட்சி பதட்டமடைகிறது. நடிகராக 5 ஆண்டு ஆட்சி கொடுத்திருக்கிறார்கள், அடுத்து தனுஷிடம் கொடுத்துவிடுவார்களோ என்று பதட்டமடைகின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தவெகவில் மரியாதை இல்லை. 101ஆவது துணை பொதுச்செயலாளராக உள்ளார்.
    தனுஷிற்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன; பாஜகவுடன் பேசுவதில் என்ன தவறு; நாங்கள் பாஜகவுடன் தான் இருக்கிறோம்.

    Advertisement

    விஜய் அரசு

    அதிமுகவிற்கு வருவாரா? பாஜகாவிற்கு வருவாரா என கேட்கிறார்கள். பாஜகவில் இருந்தால் தவறு ஒன்றுமில்லை. விஜய் அரசு இந்த 6 மாசம் தாண்டட்டும்.. எதோ அதிர்ஷ்டத்தில் வந்துவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி் 45 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். அதிமுக இருக்கிறதா என கேட்கும் நிர்மல்குமாருக்கு கண் தெரியுமா? பரமசிவன் பாம்பு கழுத்தில் இருக்கும் பாம்பு போல மாறியுள்ளார் நிர்மல்குமார். லெட்டர்பேடு இல்லாத கட்சி எதுவுமில்லை, அனைத்து கட்சிகளிலுமே லெட்டர்பேடு இருக்கதான் செய்யும்" என்றார்.

    English Summary

    AIADMK leader Dindigul Srinivasan says Dhanush’s possible political entry is welcome, adding that BJP links would not be an issue.