தமிழ்நாடு சிந்திக்கும் என்ற கூட்டம் போய்விட்டது.. அது திரையரங்கு முன் நிற்கிறது.. இயக்குநர் அமீர்!

  • சென்னை: தமிழ்நாடு சிந்திக்கும் கூட்டம் என்ற பெயர் மாறிவிட்டது என்று இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார். அப்படி சிந்தித்திருந்த கூட்டம் இப்போது திரையரங்கு முன்பு நின்று கொண்டிருக்கிறது என்று கூறிய அமீர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருவதாகவும் கூறியுள்ளார்.

    Advertisement

    டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்தி வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது. டெல்லியில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவி இருக்கிறது. சோசியல் மீடியா முழுக்க மாணவர்கள் மீது காவல்துறை நடத்தி வரும் தாக்குதல் வீடியோக்கள் நிரம்பி இருக்கின்றன. இது சாமானிய மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

    Advertisement

    அந்த வகையில் சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.இரஞ்சித், வெற்றிமாறன், நடிகை ரேவதி, ஆண்ட்ரியா, அருண் மாதேஸ்வரன், மன்சூர் அலிகான், கலையரசன், ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் இயக்குநர் அமீர் பேசுகையில், மக்கள் நன்றக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் போதும்.. அந்த சிந்தனை தான் நம்மை இங்கு ஒன்று சேர்த்திருக்கிறது. 10 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறோம். அனிதா மரணத்தில் தொடங்கிய ஓலம் இன்று வரை நிற்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக சொல்வார்கள். அவர்களும் செய்ய மாட்டார்கள்.

    Advertisement

    ஆண்டுவிட்டு போய்விட்டார்கள். அனிதா இறப்புக்காக அவரின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல ஒருவர் சென்றார்.. அவரும் எதுவும் செய்ய மாட்டார். இந்த ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு நிலையை கொண்டு வருவார்கள் என்று நம்பி கொண்டிருப்பது ஏமாற்று வேலை.. எந்த கட்சியும் செய்யாது என்று ஆழமாக நம்புகிறேன். அரசியல் என்பது அவர்களுக்கு பிழைப்புவாதம்.

    தமிழ்நாடு சிந்திக்கும் கூட்டம் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறினார். அந்த நம்பிக்கை எல்லாம் எங்களுக்கு போய்விட்டது. அந்த கூட்டம் திரையரங்கு வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அப்படி இருந்த கூட்டத்தை மூளைச்சலவை செய்து ஒருவர் அழைத்து சென்றுவிட்டார். சாதி, மதம், சினிமா கவர்ச்சி என்று அவர்களை இழுத்து சென்றுவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Director Ameer: Tamilnadu is no longer a thinking society says Director Ameer and Slams Crowds Outside Theatres Over Priorities