குரு பாரதிராஜா மறைந்த 17 வது நாளில் பிரிந்த பாக்யராஜ் உயிர்.. என்ன நடந்தது?

  • சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. குருவான பாரதிராஜா கடந்த 10ம் தேதி மறைந்ததில் மனம் நொந்துப்போன பாக்யராஜ் அடுத்த 17 வது நாளில் காலமாகி உள்ள நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். இவருக்கு வயது 73. இவர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.

    Advertisement

    வயது முதிர்வால் பாக்யராஜ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார் பாக்யராஜ்.

    இந்நிலையில் தான் இன்று காலையில் பாக்யராஜ் காலமானார். பாக்யராஜ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாக்யராஜ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மாரடைப்பு காரணமாக பாக்யராஜ் உயிர் பிரிந்தது. இதனால் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    கடந்த 10ம் தேதி தான் பாக்யராஜை திரைத்துறையில் அறிமுகம் செய்து இயக்குநர், நடிகராக உருவாக்கிய இயக்குநர் பாரதிராஜா காலமானார். அவரது மறைவால் பாக்யராஜ் நொந்து போனார். நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தான் பாக்யராஜ் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    Advertisement

    பாக்யராஜ் திரைத்துறையில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை அமைப்பாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டியவர். இருப்பினும் இவருக்கு குரு என்றால் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா தான்.

    பாக்யராஜ் முதல் முதலில் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றியது பாரதிராஜாவிடம் தான். அவரது 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு தான் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகம் ஆகி 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தை இயக்கினார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களை இயக்கி திரைத்துறையில் உச்சத்தை தொட்டார் பாக்யராஜ்.

    Advertisement

    பாக்யராஜின் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகம் செய்ததும் பாரதிராஜா தான். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டத்திலேய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பாக்யராஜை நடிக்க வைத்திருப்பார் பாரதிராஜா. அதன்பிறகு சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் பாக்யராஜ்க்கு வாய்ப்பு வழங்கி இருப்பார் பாரதிராஜா.

    இப்படி திரைத்துறையில் பாக்யராஜ் வளர குருவாக இருந்த பாரதிராஜா கடந்த 10ம் தேதி காலமான நிலையில் அடுத்த 17 நாளில் பாக்யராஜ் மறைந்துள்ளார் என்பது சோகத்திலும் சோகம். இதனால் தமிழ் திரையுலகத்தினர், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    English Summary

    Director Bhagyaraj Died: Bhagyaraj, a renowned director and actor in Tamil cinema, passed away today. He died of a heart attack at Apollo Hospital in Chennai. Heartbroken over the death of his mentor Bharathiraja on the 10th of this month, Bhagyaraj himself passed away just 17 days later; poignant details regarding the circumstances have now emerged.