சென்னை: தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, தனது 50 ஆண்டுகால கலைப்பயணத்தில் எண்ணற்ற சாதனைகளையும் விருதுகளையும் குவித்துள்ளார். 1977-ல் '16 வயதினிலே' படத்தின் மூலம் அறிமுகமான அவர், இன்று தனது 84-வது வயதில் மறைந்தாலும், அவர் படைத்த காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும்.
தனது அரை நூற்றாண்டு கால திரைப்பயணத்தில் பாரதிராஜா பெற்ற முக்கிய விருதுகளின் தொகுப்பு இதோ:
பத்மஸ்ரீ (2004): இந்தியத் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான 'பத்மஸ்ரீ' வழங்கி கௌரவித்தது. கௌரவ டாக்டர் பட்டம் (2005): சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. நந்தி விருது (1981) 'சீதாகோக சிலகா' படத்திற்காக ஆந்திர அரசின் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றார். பாரதிராஜா வெறும் இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம். கிராமத்து எதார்த்தங்களை திரையில் வடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. 50 ஆண்டுகால பயணத்தில் அவர் பெற்ற இந்த விருதுகள், அவரது உழைப்பிற்கும் திறமைக்கும் சான்றாக விளங்குகின்றன. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது காந்தக் குரலும், அவர் அறிமுகப்படுத்திய எண்ணற்ற கலைஞர்களும் தமிழ் சினிமாவின் பொற்காலமாக என்றும் நினைவு கூறப்படுவார்கள்.தேசிய திரைப்பட விருதுகள் (6 முறை)
பிலிம்பேர் விருதுகள் (4 முறை)
தமிழக அரசு மாநில திரைப்பட விருதுகள் (6 முறை)
அரசின் உயரிய கௌரவங்கள்
இதர விருதுகள்
விஜய் விருதுகள் (2013) 'பாண்டிய நாடு' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.