நாதகவில் காலியான முக்கிய விக்கெட்.. வெறுப்பரசியல் செய்யும் தம்பிகள்! கண்டுக்காத சீமான்..பகீர் புகார்

  • சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் களஞ்சியம். நாம் தமிழர் கட்சியினர் சக கட்சியினரையே குறிவைத்து வெறுப்பு அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். களஞ்சியம், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    கடந்த சில வருடங்களாகவே நாம் தமிழர் கட்சியில் புயல் வீசி வருகிறது. அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர் நாம் தமிழர் தம்பிகள். ஏற்கனவே கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்த ராஜீவ் காந்தி விலகி திமுகவிலும், கல்யாண சுந்தரம் விலகி அதிமுகவிலும் இணைந்தனர்.

    Advertisement

    இது மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், திருப்பத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் கொத்துக்கொத்தாக விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வந்தது பரபரப்பைக் கிளப்பியது.

    நாதகவினர் விலகல்

    அதற்குப் பிறகு சற்று ஓய்ந்த கட்சி தாவல் படலம் மீண்டும் வேகம் எடுத்தது. கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த ஜெகதீச பாண்டியன், காளியம்மாள் ஆகியோரும் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக திமுக தோல்வியை சந்தித்தன. ஆனால் நாம் தமிழர் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கட்டிய டெபாசிட் காலியானது.

    Advertisement

    களஞ்சியம்

    இந்த நிலையில் மீண்டும் நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு முக்கிய விக்கெட் காலியாகி இருக்கிறது. பிரபல இயக்குனர் களஞ்சியம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக சீமானுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குனர் களஞ்சியம் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

    தமிழ்த்தேசிய அரசியல்

    அதில்," கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் உங்களோடு உங்களின் நம்பிக்கைக்குரிய தம்பியாகப் பயணித்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். "தமிழர் நலப் பேரியக்கத்தின்" தலைவராக நான் 2016-ஆம் ஆண்டு உங்களோடு இணைந்தது முதல், களப்பணி, தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் எனத் தங்களின் வழிகாட்டலில் கட்சியின் வளர்ச்சிக்காக எனது முழு ஆற்றலையும் அர்ப்பணித்துச் செயல்பட்டுள்ளேன்.

    Advertisement

    தனிநபர் விமர்சனம்

    கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி என்னை அழைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தீர்கள். அவ்வாறு 8- ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியில் இணைந்து, 2-முறை தேர்தலில் பங்கெடுக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்கு நன்றி அண்ணா. தற்போது, இயக்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள், தனிநபர்கள் மீதான விமர்சனங்களின் தரம் குறித்து எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு.

    வெறுப்பரசியல்

    தமிழ்த்தேசியக் கொள்கை என்பது வெறுப்பரசியலைக் கடந்தது; அது அனைவரையும் உள்ளடக்கிய அதிகார மாற்றத்திற்கான கருத்தியல் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு நேர்மாறாகக் கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விமர்சனங்கள் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாக இருக்கக் கூடாது என்பது எனது உறுதியான நம்பிக்கை.

    Advertisement

    இழிவான விமர்சனம்

    குறிப்பாக, நம்மோடு பயணித்தவர்கள் மற்றும் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீதான இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்று நான் கருதுகிறேன். எனவே, எனது அரசியல் புரிதலும் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளும் கட்சியின் தற்போதைய போக்கிலிருந்து மாறுபடுகின்றன. இருப்பினும், உங்கள் மீதான மரியாதையை நான் எப்போதும் கொண்டிருப்பேன்.

    கட்சியிலிருந்து விலகல்

    கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால், நான் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்தும், நாம் தமிழர் கட்சியிலிருந்தும் முறைப்படி விலகிக் கொள்கிறேன். தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஒரு தம்பியாக எனது பயணம் தொடரும்." என கூறியுள்ளார்.

    English Summary

    Director Kalanjiyam resigns from Naam Tamilar Katchi, alleging hate politics and raising concerns over the party's current direction.