விஜய்யிடம் சீட் கேட்ட லோகேஷ் கனகராஜ்? புஸ்ஸி ஆனந்த் சொன்ன மேட்டர்.. கோர்த்துவிட்ட அமைச்சர் வினோத்!

  • சென்னை: முதல்வர் விஜய்யை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவர் ஒரு தொகுதியை கேட்டதாகவும், அதனை தவெக மாவட்டச் செயலாளருக்காக கொடுக்க மறுத்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஒரு கருத்தை பேசி இருந்தார். இதனால் அந்த இயக்குநர் யார் என்ற விவாதம் தொடங்கி சோசியல் மீடியாவில் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சட்டசபையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், நான் புதுச்சேரியில் எம்எல்ஏ-வாக இருந்தேன். சாதாரண ஆள்.. இங்கே நான் அமைச்சராக இருக்கிறேன் என்றால், முதல்வர் விஜய் தான் காரணம். ஊழலற்ற ஆட்சியை இலக்காக வைத்து செயல்படும் முதல்வருக்கு நாம் உறுதுணையாக இருப்போம். தேர்தலின் போது சபாநாயகர் கேட்ட தொகுதியை என்னால் கொடுக்க முடியவில்லை.

    Advertisement

    வேறொரு மாவட்டச் செயலாளருக்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதேபோல் செங்கோட்டையன் நீங்கள் என்ன தொகுதியை கொடுத்தாலும் பிரச்சனை இல்லை என்றவர். அதுபோல் பிரபல இயக்குநர் ஒருவர்.. முதல்வர் விஜய்யை வைத்து படம் இயக்கி இருக்கிறார். அவர் ஒரு தொகுதியை கேட்டிருந்தார். அடுத்த நாள் மீண்டும் வந்து அந்த தொகுதியின் பெயரை சொல்லி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கேட்டார்.

    அப்போது நான், கோச்சுக்காதே நண்பா.. அந்த தொகுதி என்னுடைய மாவட்டச் செயலாளர் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அவரை விட்டுவிட்டு உனக்கு கண்டிப்பாக தரமாட்டேன்.. கோச்சுக்காத என்று சொன்னேன் என்று தெரிவித்தார். புஸ்ஸி ஆனந்தின் பேச்சு காரணமாக தவெகவில் சீட் கேட்ட அந்த இயக்குநர் யார் என்ற விவாதம் சோசியல் மீடியாவில் தொடங்கி இருக்கிறது.

    Advertisement

    தற்போது சட்டசபை வீடியோ மூலமாக ஒரு பதில் கிடைத்திருக்கிறது. புஸ்ஸி ஆனந்த் அந்த இயக்குநர் பற்றி சொல்லும் போதே, சட்டசபையில் வேளாண் அமைச்சர் வினோத், தன்னுடைய அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் விக்னேஷ் கைகாட்டி கொண்டிருந்தார். அமைச்சர் விக்னேஷ் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக வந்துள்ளார்.

    இதனால் விஜய்யை வைத்து அண்மையில் படம் இயக்கிய கோவை இயக்குநர் என்றால், அது லோகேஷ் கனகராஜ் தான். இதனால் லோகேஷ் கனகராஜ் தவெகவில் சீட் கேட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ என்று 2 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், ஜனநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதனால் விரைவில் லோகேஷ் கனகராஜ் தவெகவில் இணைந்து அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    English Summary

    Director Lokesh Kanagaraj Asked CM Vijay for an MLA Seat in TVK? Bussy Anand Statement Triggers Social Media Buzz