கடையை மூடிய டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்யுங்க.. தவெக ஆதரவாளர்கள் போட்ட லிஸ்ட்

  • கோவை: டாஸ்மாக்கில் பாட்டிலை திரும்ப பெறும் போது கூடுதல் தொகை வசூலிக்காமல், பாட்டிலேயே அரசு எம்ஆர்பியை சேர்த்துள்ளது. பாட்டிலை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் திரும்ப கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்ததிட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களை பொறுத்தவரை பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தினை தாங்கள் ஏற்க முடியாது என்றும், அதற்கு தனியாக ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

    Advertisement

    ஆனால் அமைச்சர் விக்னேஷ், காலி பாட்டிலுக்கு கணக்கு கேட்டால் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், இது மிகப்பெரிய ஊழல் என்றும் முந்தைய டாஸ்மாக் துறை அமைச்சர்களை போல் நானும் அமைதியாக கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே அமைச்சர் விக்னேஷின்பேட்டி வைரலான நிலையில், தவெக ஆதரவாளர்கள், அரசுக்கு ஆதரவாக பிரச்சனை குறித்து பேசி வருகிறார்கள்.

    Advertisement

    தவெகஆதரவாளர் ஒரு டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில்,

    ✅ முதல் ஊதிய உயர்வு (ஜூலை 7): 25%
    • மேற்பார்வையாளர்கள் (Supervisors): ₹17,850 → ₹22,313
    • விற்பனையாளர்கள் (Salesmen): ₹15,530 → ₹19,413
    • உதவி விற்பனையாளர்கள் (Asst salesmen): ₹14,340 → ₹17,925

    ✅ இரண்டாம் ஊதிய உயர்வு (செப்டம்பர் 1):
    • மேற்பார்வையாளர்கள்: ₹33,023
    • விற்பனையாளர்கள்: ₹30,284
    • உதவி விற்பனையாளர்கள்: ₹28,680

    சென்னையில் காரைவிட ஆட்டோவில் அதிக கட்டணம்.. இந்தியாவிலேயே தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மிக அதிகம்

    ✅ பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு - இது 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கை.

    Advertisement

    ✅ சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறை.

    ✅ மாதம் 2 நாட்கள் விடுப்பு.

    ✅ ஆண்டுதோறும் ₹20,000 வட்டி இல்லா பண்டிகை முன்பணம்.

    ✅ ஆண்டுதோறும் 3 செட் சீருடைகளுக்காக ₹6,000 முன்பணம்.

    ✅ கடை பராமரிப்புச் செலவு (Shop maintenance allowance): மாதத்திற்கு ₹750-லிருந்து பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:
    • மாநகராட்சிகள்: ₹5,000
    • நகராட்சிகள்: ₹4,000
    • கிராமப்புறங்கள்: ₹3,000

    ✅ மதுபானங்களை இறக்கும் கூலி, மின்சாரக் கட்டணம் மற்றும் கடை வாடகை போன்ற செயல்பாட்டுச் செலவுகள்.

    அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்
    Advertisement

    ✅ திருத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், பணியாளருக்கான 12% பி.எஃப் (PF) பங்களிப்பை அரசே ஏற்கும்.

    அமைச்சர் விக்னேஷ் அவர்களே இவ்வளவு சலுகைகளை வழங்கிய பிறகும், அவர்கள் தங்கள் பணியைச் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்கள் தாராளமாக வீட்டிலேயே இருக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரு வாய்ப்புக்காக ஒவ்வொரு நாளும் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    தயவுசெய்து அவர்களைச் சமாதானப்படுத்துவதை நிறுத்திவிட்டு, உண்மையிலேயே பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அந்த வேலை வாய்ப்பை வழங்குங்கள்!!" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    TVK supporters urge Minister Vignesh to dismiss TASMAC employees who are protesting by closing down shops.