தீபாவளிக்கு எந்த பஸ் ஸ்டாண்டுக்கு போகணும்? கிளாம்பாக்கமா, கோயம்பேடா? சென்னை மக்கள் கவனத்திற்கு

  • சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறீர்களா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிலையம் எது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு சென்னையில் 5 வெவ்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், எந்த ஊருக்கு செல்ல எந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற முழு விவரம் வெளியாகியுள்ளது.

    Advertisement

    நாளை நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நவம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    Advertisement

    தீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்கள்

    வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 15,659 பேருந்துகள் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் ஒரே இடத்தில் பயணிகள் குவிவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அவர்கள் செல்லும் வழித்தடங்களுக்கு ஏற்ப 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    எந்த ஊருக்கு எங்கே போகணும்?

    1. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு

    தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்குச் செல்ல வேண்டும்.

    Advertisement

    திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, திருச்செந்தூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் புறப்படும்.

    2. CMDA காலநிலை பூங்கா

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள CMDA காலநிலை பூங்கா தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    சேலம், கோயம்புத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் மட்டுமின்றி செஞ்சி மார்க்கமாக வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன.

    Advertisement

    3. மறைமலைநகர்

    டெல்டா மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    கிளாம்பாக்கத்தில் இருந்து மறைமலைநகர் செல்ல பயணிகளுக்கு இலவச இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    4. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு

    சென்னையின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அணுக வேண்டும்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.

    Advertisement

    மேலும் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, திருத்தணி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    5. மாதவரம் பஸ் ஸ்டாண்டு

    ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திராவுக்குச் செல்லும் பேருந்துகள், காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. வழக்கமான சேவைகளாக திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன.

    பயணிகளுக்கு என்னென்ன வசதிகள்?

    பேருந்து நிலையங்களுக்கு இடையே செல்வதற்காக இலவச இணைப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், முன்பதிவு செய்த பயணிகளை சென்னையின் 16 முக்கிய இடங்களில் இருந்தே நேரடியாக ஏற்றிச் செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    பயணிகளின் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, மின்னணு தகவல் பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    எனவே, கடைசி நேரத்தில் அவசரப்பட்டு தவறான பேருந்து நிலையத்திற்கு செல்வதைத் தவிர்க்க, ஊருக்கான பேருந்து புறப்படும் இடத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பயணத்தை திட்ட திட்டத்தை வகுக்கலாம்...!!

    English Summary

    Which Bus Stand Should You Reach in Chennai for Diwali 2026? Kilambakkam, Koyambedu and More