Diwali Bonus: ஆவின் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு.. ஊழியர்கள் செம குஷி!

  • சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

    Advertisement

    தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று டாஸ்மாக் பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

    Advertisement

    இந்நிலையில் இன்று (நவம்பர் 4) ஆவின் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60%-இல் இருந்து 63% ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தற்போது ஆவினில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஆவின் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 29 மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 3,002 ஆவின் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை உள்பட மொத்தம் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆவின் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை நிதிச் சுமையின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு போனஸை அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பிரிவில் பணியாற்றும் 791 நபர்கள், D பிரிவில் பணியாற்றும் 102 நபர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 213 நபர்கள் என 1106 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலும் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் C பிரிவில் பணியாற்றும் 991 நபர்கள் D பிரிவில் பணியாற்றும் 901 நபர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள் 4 நபர்கள் என 1896 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலும் என மொத்தம் C பிரிவில் பணியாற்றும் 1782 நபர்கள் பயனடைவார்கள்.

    Advertisement

    D பிரிவில் பணியாற்றும் 1003 நபர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 217 நபர்கள் என 3002 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4.49 கோடி மதிப்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை பெற்று பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆவின் பால் விலை ரூ.5 உயர்கிறதா? வெளியான தகவல் குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம்!

    தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 2026 தீபாவளி பண்டிகைக்கு 20% போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆவின் பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்பட்டிருப்பது பணியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Advertisement

    சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், 16 ஆவின் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கினார் பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி.

    சமீபத்தில் ஆவினில் தயாரிக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக தகவல் பரவியது. பால் விலை உயர்வு இல்லை என்றும், அப்படி பரவுவது வதந்தி என்றும் ஆவின் நிறுவனம் அண்மையில் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Tamil Nadu government has announced that a 20% Diwali bonus will be provided to employees working at Aavin, a public sector undertaking of the Tamil Nadu government.