சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட இருக்கும் நிலையில், மக்கள் கொண்டாடாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை நாளில் சென்னை வானில் இருந்து பார்க்கும் போது எப்படி உள்ளது என்ற வீடியோவை விமானி ஒருவர் பகிர்ந்துள்ளார். வானில் வர்ணஜாலம் காட்டும் வாண வேடிக்கைகளுடன் கலர் கலராய் சென்னை வானம் ஜொலி ஜொலிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தீப ஓளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே.. பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். நாளை பட்டாசுகளை வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகிறர்கள்.
தீபாவளி பண்டிகையின் போது இரவில் வானம் முழுக்க வர்ண ஜாலமாக காட்சியளிக்கும். தீபாவளிக்கு ஒருநாளே இருக்கும் நிலையில், சென்னையை கடந்து சென்ற விமானம் ஒன்றில் இருந்து விமானி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். பிரதீப் கிருஷ்ணன் என்ற விமானி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விமானத்தில் இருந்து தீபாவளியை கொண்டாடுகிறோம். கீழே பார்த்தீர்கள் என்றால் எவ்வளவு அழகாக சென்னை இருக்கிறது என்று பார்க்கலாம் என அந்த வீடியோ தொடங்குகிறது. அந்த வீடியோவில் சென்னை நகரமே பட்டாசுகளால் வர்ணஜாலமாக காட்சி தருகிறது. மின்விளக்குகளால் ஒருபக்கம் நகரம் ஜொலிக்கும் நிலையில், அதன்மேலே பட்டாசுகள் கலர் கலாய் வெடித்து சிதறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கொள்ளையடிக்கும் இருக்கும் இந்த காட்சிகளை பலரும் பகிர்ந்து வருகின்றன. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் சுவாரசியமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சென்னை இரவில் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது.. சென்னைக்கு ஈடு இணையே இல்லை என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதா? அல்லது பதிவிட்ட நாளில் எடுக்கப்பட்டதா? என்றும் ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார். எது எப்படியோ தீபாவளியை கொண்டாட சென்னை தயாராகி வரும் நிலையில் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வெறும் டிரைலர்தான். தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழகத்தில் நேற்றே தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால், நேற்று விடிய விடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வேயும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள், சென்னையில் இருந்து நெல்லை, தென்காசிக்கு சிறப்பு ரயில்களை இயக்கியது. இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூர் மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளனர். இதனால் நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது.எவ்வளவு அழகாக இருக்குது சென்னை
கலர் கலராய் வெடிக்கும் பட்டாசுகள்
வேறு மாதிரி மாறிய சென்னை பப் விவகாரம்.. பெண்களை வீடியோ எடுத்த நிருபர் மீது கடுமையான பிரிவில் வழக்கு
களை கட்டும் தீபாவளி
ஆத்தி.. எவ்வளவு பெரிய இடி சத்தம்.. மின்னலால் அதிர்ந்துபோன சென்னை.. வெள்ளத்தில் மிதந்த கிளாம்பாக்கம்!