இன்று முதல் ரூ.200-க்கு 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி மளிகைத்தொகுப்பு.. எப்படி பெறலாம்?

  • சென்னை : 128 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.200-க்கு 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி மளிகைத்தொகுப்பு விற்பனை இன்று தமிழக அரசால் தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் அமைந்துள்ள மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி (சுய சேவை பிரிவு) விற்பனை நிலையத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் இன்று தொடங்கி வைக்கிறார்.

    Advertisement

    விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் சூழலில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த சூழலில புது துணி எடுப்பது, பட்டாசு வாங்குவது, மளிகை பொருட்கள் வாங்குவது, ஊருக்கு செல்வது, அரிசி வாங்குவது என பல செலவுகளை மக்கள் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

    Advertisement

    இந்த சூழலில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒருங்கிணைந்த "சிறப்பு மளிகைத் தொகுப்பு" ரூ.200 என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தத் திட்டத்தை சென்னை செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் அமைந்துள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி (சுய சேவை பிரிவு) விற்பனை நிலையத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் இன்று தொடங்கி வைக்கிறார்.

    Advertisement

    இத்தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் மற்றும் அவற்றின் அளவு விவரம் வருமாறு:-

    1.கடலைப் பருப்பு - 250 கிராம், 2.புளி 250 கிராம், 3.பாசிப் பருப்பு250 கிராம், 4.கடுகு100 கிராம், 5.மிளகாய் - 100 கிராம், 6. உடைத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம், 7.தனியா - 150 கிராம், 8.சீரகம் - 50 கிராம், 9.பூண்டு - 150 கிராம், 10.சோம்பு - 50 கிராம் என மொத்த எடை1,450 கிராம் கொண்ட 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 2.29 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கிறார்கள்,, அனைவருக்கும் 200 மதிப்பிலான மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ. 458 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுளளது.கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு விற்பனை மையங்களுக்கு சென்று மக்கள் வாங்கி கொள்ளலாம். ரேஷன் கார்டு எதுவும் தேவையில்லை. நேரடியாக பணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.

    Topics: #grocery #diwali

    English Summary

    The Tamil Nadu government is launching the sale of a Deepavali grocery kit—containing 10 items for Rs. 200—across 128 cooperative retail outlets today. Minister for Cooperation, Gandhiraj, will inaugurate the initiative today at the Marudham Cooperative Supermarket (self-service section) located on GNT Road in Sengundram, Chennai.