தியாகராய நகரில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம்.. ஒரேயடியாக குவிந்த மக்கள்.. போலீஸ் பலத்த பாதுகாப்பு

  • சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தியாகராயர் நகர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். வார இறுதி விடுமுறை என்பதால் இன்று மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி இருக்கிறது. மதங்களை தாண்டி பல்வேறு தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் தீபாவளி இந்தாண்டு வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

    Advertisement

    தீபாவளி

    தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் தான். இந்தாண்டும் தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு மக்கள் இப்போதே கடைகளுக்கு படையெடுத்துள்ளனர். சென்னையில் தியகராய நகரில் காலையிலிருந்தே மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தெருவின் எந்த பக்கம் பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுவதால், அப்பகுதி பரபரப்பாக உள்ளது.

    தி.நகர் பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான புதிய ரக ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குடும்பம் குடும்பமாக வரும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்தாண்டு விலைவாசி உயர்வு காரணமாக ஷாப்பிங் சற்று குறைந்துள்ளது என்றாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. தியகராக நகர் முழுக்க கூட்டம் உச்சத்திலேயே இருக்கிறது.

    Advertisement

    உச்சத்தில் கூட்டம்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் ஷாப்பிங் செய்வதால் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுவாகவே வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரங்கநாதன் தெருவில் மக்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது தீபாவளியும் நெருங்கிவிட்டதால், இந்த வீக் எண்ட் கூட்டம் உச்சத்தில் இருக்கிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் மக்கள் கூட்டம் இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கவும் சென்னை போலீசார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரங்கநாதன் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 150 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    போலீசார்

    மேலும், கூட்டத்தில் பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியவும், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் டிரோன் கேமராக்களையும் போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பாதுகாப்பு கோபுரம்

    ரங்கநாதன் தெருவை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் து இருந்து போலீசார் மக்கள் கூட்டத்தையும் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்களையும் கவனித்து வருகின்றனர். தீபாவளி நெருங்கும் நாட்களில் ஷாப்பிங் செய்ய வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    English Summary

    With Diwali just a week away, Chennai's T Nagar and Ranganathan Street are witnessing heavy shopping crowds(தீபாவளி நாளில் ஷாப்பிங் தீவிரம்): Diwali Shopping Rush in Chennai latest news in tamil.