தீபாவளி சிறப்பு ரயில்கள்.. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரைக்கு குட்நியூஸ்

  • சென்னை : பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது, பலரும் சொந்த ஊர் செல்வார்கள். அவர்களின வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 95 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த முறை நவம்பர் 8ம் தேதி ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே பலரும் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை சொந்த ஊர் செல்வார்கள். இறுதியாக சனிக்கிழமையும் சொந்த ஊர் செல்வார்கள். எனவே அவர்களின் வசதிக்காக இந்த 3 நாட்களில் அதிகப்படியான ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    ஆயுதபூஜை பண்டிகை வரும் திங்கள் அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகிறார்கள். இவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. வரும் நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 8 முதல் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. இவர்களின் முதல் தேர்வு ரயில் பயணமாக இருக்கிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும். தட்கலில் டிக்கெட் பெறுவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல் கடினமானது. சாத்தியமே இல்லாத ஒன்றாக சமானிய மக்களுக்கு இருக்கிறது.

    கார்களால் 41.62 கோடி வருவாய் ஈட்டிய சிங்கபெருமாள் கோவில் சரக்கு முனையம்.. தெற்கு ரயில்வே
    Advertisement

    தற்போதைய நிலையில் தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால், ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பலரும் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள்.

    இவர்கள் தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். எனவே, பயணிகளின் வசதிக்காக நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருக்கிறது.

    இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரயில்வேயில் இருந்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 85 சிறப்பு ரயில்கள் இயக்கினோம். நடப்பாண்டு அதைவிட சற்று கூடுதலாக, மொத்தம் 95 ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், இது பயணிகளின் தேவையை பொறுத்து கடைசி நேரத்தில் இந்த எண்ணிகை மாறுபடும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டும் 20 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டு வருகிறோம்.

    Advertisement
    சேலத்தில் 6 சென்ட் நிலம்.. பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ போட்ட கண்டிசன்.. கைதில் முடிந்த ட்விஸ்ட்

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத்தீர்ந்துவிடுவதால், 20 ரயில்கள் தவிர சென்னையில் இருந்து இயக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்குக் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை அனுப்ப உள்ளோம்" என்று அதிகாரிகள் கூறினார்கள். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல் நாள் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் காரைக்குடி, மதுரை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    English Summary

    Diwali special trains 2026 , Diwali special trains for Tirunelveli, Diwali special trains Thoothukudi, Diwali special trains Nagercoil, Diwali special trains Madurai, Diwali special trains Kanyakumari , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 95 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது, தீபாவளி சிறப்பு ரயில்கள்