தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? 6 சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடங்கிய வேகத்தில் காலியான டிக்கெட்கள்

  • சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தெற்கு ரயில்வே கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பயணிகள் பலரும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய காத்திருந்தனர். ஆனால், ரிசர்வேஷன் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நடந்தது என்ன தெரியுமா?

    Advertisement

    தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. பண்டிகை வந்துவிட்டாலே சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகும் பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கிடைப்பதே பெரும் பாடாகி விடுகிறது.

    Advertisement

    அதனால்தான், ரயில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.. அந்த ரயில்களின் டைமிங்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..

    தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா

    ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் இடையே நவம்பர் 5ம் தேதி இரவு 8.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 7ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

    மேலும், ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே நவம்பர் 9ம் தேதி மாலை 4.55 மணிக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் இடையே நவம்பர் 10ம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 11ம் தேதி நண்பகல் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது.

    Advertisement
    சென்னையிலிருந்து நினைத்து கூட பார்க்க முடியாத வேகத்தில் ரயில்.. கோவை வழியாக திருவனந்தபுரம் போகலாம்

    சென்னை டூ ராமேஸ்வரம்

    அதேபோல், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே நவம்பர் 10ஆம் தேதி இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாளில் மாலை 5.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 10ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    Advertisement

    தாம்பரம் - செங்கோட்டை இடையே நவம்பர் 9ம் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து நவம்பர் 10ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில்கள் மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இதுதவிர, திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் இடையே நவம்பர் 10ஆம் தேதி இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் நவம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து ரயில் புறப்படுகிறது.

    Advertisement

    சில நிமிடங்களில் காலி

    இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 3) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. இதனால் இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பல பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே மேலும் சிறப்பு ரயில்களை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English Summary

    Diwali Special Trains.. Bookings Opened at 8 AM, Tickets Sold Out Within Minutes