தீபாவளிக்கு சொந்த ஊர் போக டிக்கெட் கிடைக்கலயா? சென்னை - திருச்சிக்கு முன்பதிவில்லாத ரயில் அறிவிப்பு

  • சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட டிக்கெட் இன்றி தவிக்கும் பயணிகளுக்கு வாய்ப்பாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை டூ திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.08) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த வகையில், நாளையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிக எண்ணிக்கையில் புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதற்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம்னி பஸ்களிலும் டிக்கெட்டுகள் புல் ஆகிவிட்டன. ரயில்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதனால் டிக்கெட் கிடைக்காத பயணிகள் சொந்த ஊர்களுக்கு எப்படி செல்வது என தலையை பிய்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் ரயில்வே பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து நாளை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

    தாம்பரம் - மானாமதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாளை (நவம்பர் 6) மாலை 5.30 மணிக்கும், வரும் சனிக்கிழமை மாலை 4.35 மணிக்கும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் மானாமதுரையில் இருந்து சனிக்கிழமை (7 ஆம் தேதி) காலை 6.30 மணிக்கும், 9 ஆம் தேதி இரவு 10 மணிக்கும் தாம்பரத்திற்கும் இயக்கப்பட உள்ளது.

    Advertisement

    அதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (நவம்பர் 06) மாலை 6.30 மணிக்கும், நாளை மறுநாள் இரவு 7 மணிக்கும் திருச்சிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், திருச்சியில் இருந்து 7 ஆம் தேதி காலை 5.50 மணிக்கு தாம்பரத்திற்கு கிளம்பும். தீபாவளி முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக திருச்சியில் இருந்து வரும் 9 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

    10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    அதுமட்டுமின்றி 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டியும் இணைக்கப்பட உள்ளது. சென்னை செண்ட்ரல் - கோவை வண்டி எண் (12243/12244) ரயிலில் நாளை முதல் 11 ஆம் தேதி வரை (தீபாவளி நாளை மட்டும் தவிர்த்து) கூடுதலாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளது.

    Advertisement

    * தாம்பரம் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் (16101) ரயிலில் நவம்பர் 5 மற்றும் 10 ஆம் தேதிகளில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

    * சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16751) வரும் 8 ஆம் தேதி வரையிலும், ராமேஸ்வரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16752), வரும் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. மொத்தம் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

    English Summary

    Diwali: Southern Railway is announcing special train services to assist passengers who are struggling to find tickets to travel home for the Diwali festival. Special trains are being scheduled both from Chennai to the southern districts and for the return journey to Chennai after the festival. In this regard, Southern Railway has announced unreserved special trains between Chennai and Trichy.