விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!

  • இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, கர்நாடக மாநிலத்தின் மூத்த தலைவரான டி.கே.சிவகுமார் நாட்டின் மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். இந்த முக்கியமான பட்டியலில் ஏற்கனவே விஜய் இருக்கும் நிலையில், இவரை முந்திக்கொண்டு தற்போது டி.கே.சிவகுமார் வந்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக (CLP) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிகே.சிவகுமார், இன்னும் பதவியேற்கவில்லை. அவரது பதவியேற்பு விழா ஜூன் 3, 2026 அன்று பெங்களூருவில் உள்ள லோக் பவன் கிளாஸ் ஹவுஸில் நடைபெறவுள்ளது.

    Advertisement

    தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ADR நடத்திய விரிவான ஆய்வின்படி, டி.கே.சிவகுமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார முதல்வர் என்ற பட்டத்தை டி.கே.சிவகுமார் பெறுகிறார். ஆனால் லீமா ரோஸ் கொடுத்த ஷாக் மிகப்பெரியது.

    பணக்கார முதலமைச்சர்கள்

    இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் தற்பொழுது தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்து வரலாறு சாதனை படைத்துள்ளனர். ஏடிஆர் (ADR) அறிக்கையின்படி, 1,413 கோடி ரூபாய் சொத்துக்களுடன் கர்நாடகாவின் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார்.

    Advertisement

    இவரைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

    அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்

    நாட்டின் பணக்கார முதலமைச்சராக திகழும் டி.கே.சிவகுமாரின் பிரமாணப் பத்திரத் தரவுகளின்படி, அவரின் 1,413 கோடி ரூபாய் ஒட்டுமொத்த சொத்துக்களில், அசையா சொத்துக்களின் (Immovable Property) மதிப்பு மட்டுமே சுமார் 1,140 கோடி ரூபாயாகும். அதே சமயம், அவரிடம் உள்ள அசையும் சொத்துக்களின் (Movable Assets) மதிப்பு 273 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

    Advertisement

    இவற்றுடன் சேர்த்து, அவருக்கு இருக்கும் ஒட்டுமொத்த கடன் பொறுப்புகள் அல்லது நிதியியல் கடன்கள் (Liabilities) 265 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகாரப்பூர்வமாகக் காட்டப்பட்டுள்ளது.

    அசுர வேகத்தில் உயர்ந்த சொத்து மதிப்பு

    கடந்த இரண்டு தசாப்தங்களாக டி.கே.சிவகுமாரின் அரசியல் செல்வாக்குடன் சேர்ந்து அவரது சொத்து மதிப்பின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.

    கடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலின் போது வெறும் 75.5 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, பின்னர் 2013இல் 251 கோடி ரூபாயாகவும், 2018இல் 840 கோடி ரூபாயாகவும் ராக்கெட் வேகத்தில் எகிறியது. இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, அது 1,413 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட உச்சத்தைத் தொட்டுள்ளது.

    Advertisement

    சொத்துக்களின் ஆதாரம்

    இந்த அசாத்திய சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு அவரது தந்தை மற்றும் பாட்டியின் உயில் மூலம் அவருக்குக் கிடைத்த பரம்பரை ரியல் எஸ்டேட் சொத்துக்கள், விவசாய நிலங்கள், பல்வேறு நிதி முதலீடுகள் மற்றும் கடந்த 20 ஆண்டுகளில் கர்நாடகாவில் ஏற்பட்ட அசுரத்தனமான நில விலை உயர்வே முதன்மைக் காரணமாகும்.

    பெங்களூரு, மைசூரு, கனகபுரா மற்றும் டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் இவருக்குச் சொந்தமாகப் வீடுகளும், பெங்களூரின் கோபால்புராவில் ஒரு மாபெரும் வணிக வளாகத்திற்கான (Mall Site) நிலமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போ தான் டிவிஸ்ட்

    முதல்வர்கள் பட்டியல் என்றால் டி.கே.சிவக்குமார் தான் பணக்காரர், ஆனால் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பார்க்கும் போது, நாட்டின் மிகப்பெரிய பணக்கார பிரதிநிதியாக தமிழ்நாட்டின் அதிமுக (AIADMK) சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் (Leema Rose Martin) விளங்குகிறார். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 5,863 கோடி ரூபாயாகவும், கடன் மதிப்பு 340 கோடி ரூபாயாகவும் உள்ளது.

    Advertisement

    இவரைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பராக் ஷா (Parag Shah) 3,383 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர மக்கள் பிரதிநிதியாகத் திகழ்கிறார்.

    லீமா ரோஸ் மார்டின் சொத்து மதிப்புக்கு முன் டி.கே.சிவகுமாரின் சொத்து மதிப்பு மிகவும் சிறியது.