31% திமுக வாக்கு வங்கி.. கூட்டணி இல்லாமலேயே இவ்வளவு வாக்குகளா? விஜய், எடப்பாடி கவனிக்க வேண்டிய விஷயம்

  • சென்னை: தமிழக அரசியலில் தவெக வளர்ந்து வரும் நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் நிலை குறித்து தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான எஸ்.பி. லட்சுமணன். அவரது பேச்சின் சுருக்கத்தை இங்கே பார்ப்போம்.

    Advertisement

    Wow தமிழா சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன், "திராவிடக் கட்சிகள் காணாமல் போய்விட்டன, அவற்றின் அரசியல் முடிந்துவிட்டது என்று விஜய் பேசியிருந்தால், தேர்தல் முடிவுகளை வைத்தே அதற்கான பதிலைப் பெற முடியும்.

    Advertisement

    உண்மையில் மக்கள் அந்தக் கட்சிகளை முழுமையாக நிராகரித்திருந்தால், தவெக 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே.. அதனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்கவில்லை என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.

    அதிமுக - சத்யபாமா

    தாராபுரத்தில் முந்தைய தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81,100 வாக்குகளைப் பெற்றிருந்தார். அப்போது தவெக வேட்பாளர் சுமார் 46,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். 2 வேட்பாளர்களுக்கும் இடையில் சுமார் 35,000 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. அதே வேட்பாளரை நிறுத்தி, இந்த முறை தவெக வெற்றி பெற்றிருப்பது சாதனைதான்.

    Advertisement

    ஆனால், இந்த வெற்றியை வைத்து அரசு செய்த அனைத்துச் செயல்களுக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்துவிட்டார்கள் என்று கருதக் கூடாது. நல்ல திட்டங்களை மக்கள் வரவேற்றிருக்கலாம். அதே நேரத்தில், அரசின் சில செயல்பாடுகள் மீது அதிருப்தியும் இருக்கலாம். அந்த வேறுபாட்டை விஜய் உணர வேண்டும்.

    100க்கு 10 ரூபாய்.. தேர்தலில் 19.8 கோடி செலவு செய்த தவெக! திமுக - அதிமுகவின் செலவு எவ்வளவு தெரியுமா?

    அதிமுகவின் தோல்வி

    தாராபுரத்தில் அதிமுகவின் தோல்விக்கு அக்கட்சியின் உள்கட்சி முரண்பாடுகளும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம். தங்கமணி, வேலுமணி போன்ற செல்வாக்குள்ள தலைவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

    Advertisement

    அதிமுகவின் வாக்குகளில் ஒரு பகுதி தவெகவுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல், தவெகவின் வெற்றிக்கு ஆளுங்கட்சியாக இருப்பது, அமைச்சர்களின் தேர்தல் பணிகள், உள்ளூர் அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணங்களும் உதவியிருக்கலாம்.

    திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான போட்டியில் தவெக வளர்ந்து வருவது உண்மை... ஆனால், அந்த வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், பழைய கட்சிகளின் தவறுகளைத் தவிர்த்து, அவற்றின் நல்ல பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்..

    அதிமுகவின் எதிர்காலம் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக சிந்திக்க வேண்டும். கட்சியை ஒற்றுமைப்படுத்தி வலுப்படுத்தாவிட்டால், அதன் வீழ்ச்சி மேலும் தீவிரமடையலாம். தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் வலுவாக இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம்.

    Advertisement
    திமுகவின் கோட்டைகளை குறி வைத்த SIR? சந்தேகம் கிளப்பும் 'பிசினஸ் லைன்' டேட்டா!

    திமுகவின் 31 சதவீத வாக்கு வங்கி

    விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இல்லாத நிலையிலும், திமுக சுமார் 31 சதவீத வாக்குகளைத் தக்கவைத்துள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் திமுக செயல்பட்டது.

    நாம் வெளியே வந்தபிறகும் திமுக இவ்வளவு வாக்கு வங்கியை பெற்றுள்ளதே என்று கூட்டணி கட்சிகள் வெட்கப்படும் அளவுக்கான முடிவு இது.. யார் எங்களை விட்டு போனாலும், எங்களுக்கான வாக்கு வங்கி உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.. அதை திமுகவினர் நிரூபிக்கவும் செய்தார்கள்.. அந்தவகையில் திமுக தொண்டர்களுக்கு இந்த தேர்தல் முடிவு நிச்சயமாக நம்பிக்கை கலந்த உற்சாகத்தை தந்துள்ளது.. நாம் வீழ்ந்துவிடவில்லை என்ற எண்ணத்தை தந்துள்ளது.

    Advertisement

    ஆனால், இதை வைத்து இனி கூட்டணிக் கட்சிகளே தேவையில்லை என்ற முடிவுக்கு அறிவாலயம் வந்துவிடக் கூடாது.. இடைத்தேர்தல் முடிவுகளை மட்டுமே வைத்து எதிர்காலத் தேர்தல்களுக்கான கூட்டணி முடிவுகளை எடுக்க முடியாது. அதேநேரத்தில், ஏற்கெனவே செய்த தவறுகளைச் சரிசெய்து, மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதும் திமுகவுக்கு முக்கியம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK 31% Vote Bank: How Did Stalin Retain Votes Without Allies? What Vijay and Edappadi Must Note