உயிருக்கு போராடி கொண்டிருந்த எம்ஜிஆர், மரகதம் குமரவேலை வளர்த்தாரா? புது உருட்டு! திமுக அட்டாக்

  • சென்னை: உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எம்ஜிஆர் எப்படி உங்களை வளர்த்திருப்பார் என தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு திமுக நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டதாக மரகதம் குமரவேல் கூறி வரும் நிலையில் காலநிலைகளுடன் திமுக நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளது வைரலாகி வருகிறது.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தான் தவெகவில் இணைந்ததற்கு, தேர்தலின் போது தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியது தங்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு வருத்தமளித்ததால் அதிமுகவில் இருந்து விலகியதாக பல்வேறு பேட்டிகளில் மரகதம் குமரவேல் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக அங்கிருந்த மக்களிடம் மரகதம் குமரவேல் வாக்கு கேட்ட போது, அவர் பேசுகையில், எம்ஜிஆரால் வளர்க்கப்பட்ட நான், அவர் வீட்டு உப்பை நான் சாப்பிட்டிருக்கிறேன். இன்று வளர்ந்து நிற்பதற்கு காரணமும் எம்ஜிஆர்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெயர் வைக்கப்பட்ட மரகதம் குமரவேல்

    முன்பெல்லாம் எம்ஜிஆரால் மரகதம் என பெயர் வைக்கப்பட்டதாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டதாக கூறுவதில் ஒரு முரண்பாடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதுகுறித்து திமுகவின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் பசுமைதேசம் சதீஷ்குமார் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: மரகதம் குமரவேல் அவர்களின் பிறந்த தேதி 27 டிசம்பர் 1982

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்

    முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென கடுமையான உடல்நலக் குறைவு (சிறுநீரகக் கோளாறு மற்றும் பக்கவாதம்) ஏற்பட்டது. அவர் அதன் பிறகு சுமார் 3 ஆண்டுகள் 2 மாதங்கள் (அக்டோபர் 1984 முதல் டிசம்பர் 1987 வரை) தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

    Advertisement

    அவரது சிகிச்சை குறித்த முக்கிய காலவரிசை

    • அக்டோபர் 5, 1984: சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
    • நவம்பர் 1984 - பிப்ரவரி 1985: மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • பிப்ரவரி 4, 1985: சிகிச்சை முடிந்து நல்ல உடல்நலத்துடன் சென்னை திரும்பினார்.
    • 1985 - 1987: சென்னை திரும்பிய பிறகும் அவர் முழுமையாகக் குணமடையவில்லை. அவர் தொடர்ந்து அமெரிக்காவிற்கு மருத்துவப் பரிசோதனைகளுக்காகச் சென்று வந்ததோடு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலேயே ஆட்சியை நடத்தினார்.
    இறுதியாக, 24 டிசம்பர் 1987 அன்று தனது 70-வது வயதில் காலமானார்.

    Advertisement

    உயிருக்கு போராடிய எம்ஜிஆர்

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவர் தன்னை வளர்த்ததாக எப்படிம்மா பொய் சொல்றீங்க? ஒருவர் பொய் பேசலாம் ஆனால் தவெக அளவிற்கு போய் பேசக்கூடாது என அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

    Topics: #dmk #politics

    English Summary

    DMK activist questions about claim of Maduranthangam TVK candidate Maragatham Kumaravel over MGR that she was brought up by MGR.