திமுக அதிமுக கூட்டணி அமையும்.. தவெகவை வீழ்த்த இதுதான் சரி.. தினகரன் பலே ஐடியா

  • மதுரை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதை தடுக்க திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக புகார் எழுந்தது. திமுக - அதிமுக கூட்டணி அமையுமா என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் திமுக அதிமுக கூட்டணி அமையுமா என கேட்கிறார்கள். அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் இணைக்கும். திமுக அதிமுக கூட்டணி உருவாவது நியாயம் தான் என்று டிடிவி தினகரன் பகீர் கருத்தை சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அரசியல் சூழல் யாரையும் இணைக்கும். பேரறிஞர் அண்ணாவும், ராஜாஜியும் ஒன்றிணைந்துள்ளனர். கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் இருந்தவர்களை இழுத்து அமைச்சரவையில் இணைப்பது நியாயம் என்றால், எந்த கூட்டணியும் நியாயம் தான். திமுக - அதிமுக கூட்டணி உருவானாலும் ஆச்சர்யமில்லை. சூழ்நிலை தான் அதை முடிவு செய்யும்.

    Advertisement

    விஜய் சினிமா கவர்ச்சி

    இந்த தேர்தலில் விஜய் 35 சதவீதம், எங்கள் கூட்டணி 23 சதவீதம், திமுக கூட்டணி அதைவிட கூடுதல் வாக்கு வாங்கியது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதை வீழ்த்துவதற்கான வியூகத்தை எதிர்க்கட்சிகள் அமைக்கும். விஜய் என்ன 50,60 வருடங்கள் சேவை செய்தாரா. சினிமா கவர்ச்சியில் தான் விஜய் ஆட்சிக்கு வந்தார். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை என்பது கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதை தான்.

    காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் மீது விஜய்க்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன். குதிரை பேரம் என்றால் கோபப்படுகிறார். எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஊழல் தான். களவாணி என்று முதல்வர் பேசுகிறார். அப்படியென்றால் எம்எல்ஏ களவாணி யார். விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். அதை சொன்னால் கோபப்படுகிறார். சினிமா கிளைமேக்டிஸில் பேசுவது போல பேசுகிறார். முதல்வர் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

    Advertisement

    ஆட்சி கலையும் பயம்

    கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு பேசியதை போலவே விஜய்யின் பேச்சு உள்ளது. ஆட்சி கலைந்துவிடுமோ என்று விஜய்க்கு பயம் உள்ளது. அமமுகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். நாங்கள் அதிமுகவுக்கு அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். அமமுகவும் ஜெயலலிதாவின் கட்சி தான்" என்று கூறினார்.

    English Summary

    AMMK TTV Dinakaran said, DMK ADMK alliance is possible. Political situation can join anyone. that's the plan to beat TVK