திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்ததில் ஈடுபட திட்டம்

  • சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நெருங்கும் போது ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறையில் உள்ள திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலிக்கப்படும், அரசு பணியாளர்களுக்கு நலவாரியம். தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப்பணி என பல்வேறு வாக்குறுதிகளை சட்டசபை தேர்தலின் போது தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டன.

    Advertisement

    ஆனால் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து 100 நாட்களை கடந்துவிட்டது .‌ இருந்தபோதிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை . இதனால் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்களை தாண்டி முதல்முறையாக போராட்டத்தில் ஈடுபட துணிந்தது டாஸ்மாக் ஊழியர்கள் தான். அண்மையில் டாஸ்மாக் பணியாளர்கள் காலமுறை போராட்டத்தை அறிவித்தனர் .பின்னர் அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது

    முன்னதாக, கடந்த 2025-ம் ஆண்டு 15-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி மே.9-ம் தேதி 6 சதவீத உயர்வை அறிவித்து தவெக அரசு உத்தரவு பிறப்பித்தது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் திமுக அரசு அதனை 4 ஆண்டாக அதிகரித்தது. தற்போது 16-வது ஊதிய ஒப்பந்தம் செப்.1-ம் தேதி 2027ம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது

    Advertisement

    இந்நிலையில் விரைவில் பண்டிகை நாட்கள் வரவுள்ளதால் மற்ற தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் திமுக மற்றும் அதிமுகவின் தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போக்குவரத்து தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்கும் போது அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், பென்ஷன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இன்னும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.‌இதற்காக அவர்கள் பண்டிகை காலங்களில் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Reports have emerged that, as Ayudha Puja and Deepavali festivals approach, DMK and AIADMK transport trade unions in the transport sector are planning to jointly go on strike to emphasize demands including pensions and regularization of jobs.