பழனி ரூ 100 கோடி நில மோசடி! விஜய்க்கு தெரிந்துதான் நடந்திருக்கு! திமுக குற்றச்சாட்டு


  • சென்னை: முதல்வர் விஜய்க்கு தெரிந்துதான் பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்றால் வந்து சொல்லட்டும் என திமுக நிர்வாகி பரந்தாமன் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்த பழனி நில பத்திரப்பதிவு விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த ஜூலை 2 ஆம் தேதி இந்து சமய அறவிலையத் துறை சார்பில் இந்த நிலத்தை பதிவு செய்யக் கூடாது என புகார் கடிதம் அளிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து அங்கிருந்த சார் பதிவாளர் பழனிசாமி நிலத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து அடுத்த நாள் 3ஆம் தேதி, வெள்ளிக்கிழமை தற்காலிகமாக பணிக்கு வந்த பாலசுந்தரம் என்பவரும் பதிவு செய்ய மறுத்து விடுப்பில் சென்றுவிட்டார்.

    இதற்கு அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் 6ஆம் தேதியான திங்கள்கிழமை அன்று சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் அனைவருமே விடுப்பில் சென்றுவிட்டனர்.

    அப்போது வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திரப்பட்டி அல்லது கீரனூர் அலுவலக அதிதாரிகளை, விடுப்பில் சென்ற பழனி சார் பதிவாளருக்கு மாற்றாக அழைக்காமல் 60 கி.மீ. தூரத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து பத்திரப்பதிவுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை அழைத்து வந்து அவசரமாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

    Advertisement
    பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலம் முறைகேடு! நடந்தது என்ன? டைம்லைனுடன் விளக்கிய அமைச்சர் ரமேஷ்!

    இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் ஆகியோரின் கருத்துகள் முரண்பாடாக உள்ளன. இந்த நிலத்தை வாங்கியதாக கூறப்படும் 2 பேர் குறித்து இதுவரை போலீஸ் தரப்பில் எந்த விவரமும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைனில் 15 லட்சம் ரூபாய் வரை முத்திரை கட்டணம் செலுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வாங்கும் அளவுக்கு அந்த இரு நபர்களுக்கும் பொருளாதார வசதி இல்லை. எனவே இந்த நில விவகாரத்தில் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    சமூகவலைதளங்களில் பேசுவோரை இரவோடு இரவாக கைது செய்யும் இந்த அரசு தவறு செய்த சார்பதிவாளரையோ முன்பு இருந்த அதிகாரிகளையோ குற்றவாளியாக சேர்க்காதது ஏன்.

    கேரளாவுக்கு வாங்க.. முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ரமேஷ் சென்னிதலா! பேசியது என்ன?

    இந்த நில மோசடி விவகாரம் முதல்வர் விஜய்க்கு தெரிந்துதான் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்றால் அவர் வந்து சொல்லட்டுமே என பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

    English Summary

    DMK Legal wing Paranthaman alleges that CM Vijay knows Palani land scam. If he doesn't know means let him clarify.