தொகுதி மறுவரையறை விஷயத்தில்.. திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கை கொடுக்காது! புதிய சிக்கலில் பாஜக!

  • சென்னை: இம்மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கு திமுக மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு கிடைக்காது என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. 3ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் மசோதா தோல்வியடைந்தது. எனவே இந்தமுறை திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவை பெற பாஜக முயன்று வருகிறது. ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் SIR பஞ்சாயத்து காரணமாக பாஜகவால் இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவை பெற முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    பாஜகவுக்கு ரொம்ப முக்கியமான மசோதா

    தொகுதி மறுவரை மசோதா பாஜகவுக்கு ரொம்பவும் முக்கியமானது. இப்போது இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கையை, மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வட மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும். எனவே, தென் மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமலேயே நாடாளுமன்ற தேர்தல்களில் ஈஸியாக ஜெயிக்க முடியும். இதுதான் கணக்கு.

    தீயாய் வேலை பார்த்த திமுக

    ஆனால், அப்படி செய்வது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது.. திமுக தீயாக எதிர்த்தது. ஒரு இன்ச் கூட விட்டுக்கொடுக்காமல்.. இந்த மசோதாவுக்கு எதிராக நின்றது. காங்கிரஸுக்கு திமுக ஃபுல் சப்போர்ட் செய்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதால்.. திமுக தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டன.

    Advertisement

    கெஞ்சும் பாஜக

    இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டுதான் பாஜக.. சைஸாக திமுகவிடம் பேச்சுக்கொடுத்து வருகிறது. நீங்க அவ்வளவு சண்டை செஞ்சிங்க.. ஆனா அவங்க (காங்கிரஸ்) கழன்று போயிட்டாங்க என்று சொல்லி.. தொகுதி மறுவரை மசோதாவுக்கு ஆதரவு கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவுக்கு திமுகவின் ஆதரவு ரொம்ப முக்கியம். மக்களவையில் 22 எம்பிக்கள் திமுகவுக்கு இருக்கிறார்கள். எனவேதான் பாஜக இப்படி கெஞ்சிக்கொண்டிருக்கிறது. அதேபோல ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியையும் தாஜா செய்து வருகிறது பாஜக.

    திமுகவின் கோபம்

    இருப்பினும் திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கின்றன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும், SIR நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். நேற்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஞானேஷ் குமாருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தப்பு பண்ணிட்டோம்

    அதேபோல, "தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் மசோதாவுக்கு ஆதரவு கொடுத்து தப்பு பண்ணிட்டோம்.. மாணவரே தனக்கான எக்ஸாம் சூப்பர்வைஸரை நியமிக்க முடியாது. மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர்களை ஆளும் கட்சிகள் நியமிக்க கூடாது" என்று காட்டமாக பேசியிருக்கிறார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி.

    வேண்டாத வேலை இது

    கடந்த 2023ல் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் மசோதாவை பாஜக கொண்டு வந்தபோது எதிர்க்கட்சிகள் சண்டை செய்தன. 100 எம்பிக்கள் வரை இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனாலும், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மசோதாவுக்கு ஆதரவை தூக்கி கொடுத்திருந்தது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். இப்போது அதற்காக வருந்துவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருக்கிறார்.

    Advertisement

    பாஜகவுக்கு பின்னடைவு

    ஆக.. தலைமை தேர்தல் விஷயத்தில் 2 கட்சிகளும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. இந்த அதிருப்தி இருக்கும் நேரத்தில்.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இந்த கட்சிகள் எப்படி ஆதரவு கொடுக்கும்? என்பது கேள்வியாக இருக்கிறது. இம்மாத இறுதியில் சிறப்பு கூட்டத்தொடரை போட்டு.. அதில் மசோதாவை அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஆனால், திமுக மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஆதரவு இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The BJP plans to reintroduce the constituency delimitation bill in Parliament at the end of this month. However, political analysts suggest that it will not receive support from the DMK or the YSR Congress.