அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய்க்கு எதிராக திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியை பிடிக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் விஜய்க்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாக திமுக வந்துள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் மீது அதிமுக கடும் கோபத்தில் உள்ளது. அதிமுகவின் உள்கட்சி பிரச்சனைகளை விஜய் சாதகமாக பயன்படுத்தி எம்எல்ஏக்களை இழுத்து வருவதாக அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது வரை அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ கே. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ பி. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா என 4 பேர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தான் இவர்கள் 4 பேரின் பின்னணியிலும் தவெகவின் குதிரைபேரம் உள்ளதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். அதிமுக கொறடா அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி சார்பில்ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் நேற்று புகார் தெரிவிக்கப்பட்டது. தவெகவினர் குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் அதிமுகவின் நடவடிக்கைக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. விஜய்யின் தவெகவிற்கு எதிரான குதிரை பேர குற்றச்சாட்டுக்கு அதிமுகவிற்கு ஆதரவாக திமுக குரல் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக திமுகவின் மூத்த தலைவரும், அந்த கட்சியின் செய்தி தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

    ''அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலால் அதிமுக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வென்ற எம்எல்ஏக்கள் எந்த காரணமும் இன்றி தங்களின் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். வென்ற உடன் அவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய தேவை ஏன்? இது கட்சி மாறுதலை தாண்டிய முக்கியமான விஷயமாகும். இதனால் அதிமுக சிபிஐ விசாரணை கோரியது நியாயமானது தான்'' என்றார். இதன்மூலம் தவெகவிற்கு எதிராக சிபிஐ விசாரணை கோரிய அதிமுகவிற்கு ஆதரவாக திமுக குரல் கொடுத்துள்ளது.

    English Summary

    DMK Supports AIADMK for MLA's Horse trading allegation against TVK: Allegations have surfaced that "horse-trading" was involved in the decision of several AIADMK MLAs to resign from their posts and join the TVK; notably, the DMK has voiced its support for the AIADMK's demand for a CBI inquiry into this matter.