அந்த பக்கம் தவெகவை கதறவிட்டுட்டு! இந்த பக்கம் உதயநிதி தண்ணீர் குடிப்பது வேற லெவல்! கொண்டாடும் திமுக!

  • சென்னை: 3 நாட்கள் டைம் இருக்கு, நல்லா prepare செய்துட்டு வரட்டும் என முதல்வர் விஜய்யை விமர்சித்த போது தவெகவினர் கத்திய போது எதிர்க்கட்சித் தலைவர் கூலாக தண்ணீர் குடித்ததெல்லாம் வேற லெவல் சம்பவம் என திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

    Advertisement

    எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது முக்கியமான பொறுப்பு. அதிலும் கடந்த முறை ஆண்ட கட்சி இந்த முறை பிரதான எதிர்க்கட்சி என்கிறபோது, ஆளும் கட்சியின் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும்.

    Advertisement

    இப்படித்தான் இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், விஜயகாந்த், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இருந்தனர். அந்த வகையில் தற்போது ஸ்டாலின் கடந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

    அவரது செயல்பாடுகள் சட்டசபையில் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த வகையில் உதயநிதி, சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யை படபடவென பட்டாசு போலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலும் உதயநிதி விமர்சித்து வருகிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய்யும் சளைத்தவர் இல்லை. என்னதான் அமைதியாகவே இருந்தாலும் திமுகவை திடீரென சரவெடி போல் வெடித்து விடுகிறார்.

    அந்த வகையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை தமிழக சட்டசபையில் உதயநிதி பேசிய பேச்சை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், கடந்த 116 நாட்களான தவெக அரசில் நிறைய கொலைகள், லாக்கப் மரணங்கள் ஏற்பட்டதாகவும், தவெக நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் இருப்பதாகவும், அதற்கு முதல்வர் விஜய் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

    மேலும் வரும் திங்கள்கிழமை பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் டைம் இருக்கிறது. நன்றாக prepare செய்துவிட்டு வரச் சொல்லுங்கள் என உதயநிதி சபாநாயகரிடம் கேட்டதுதான் தாமதம். உடனே தவெக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் கத்த தொடங்கினர். அப்போதும் விஜய் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

    Advertisement

    அவர்களை கத்தவிட்டுவிட்டு உதயநிதி ஒரு டம்ளர் தண்ணீரை குடித்தது தரமான செய்கை என திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். சட்டசபையில் திமுகவினர் உதயநிதியின் பேச்சை ரசித்து வருகிறார்கள். அவர் பேசியதை பிட்டுபிட்டாக பிரித்து போட்டு அடித்து வருகிறார்கள்.

    எனவே வரும் திங்கள்கிழமை முதல்வர் விஜய், உதயநிதி உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்கிறாரா, இல்லை திமுகவை விமர்சித்துவிட்டு அமர்வாரா என்பது தெரியவில்லை. விஜய்யின் பதிலுக்கு திமுக எந்த மாதிரியான பதிலடியை கொடுக்க தயார் நிலையில் இருக்கும் என்பதையும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

    English Summary

    DMK are very happy with performance of Udhayanidhi stalin In assembly as Leader of Opposition party.