இதுதான் மரியவில்சன் சொன்ன அன்பின் மொழியா? தம்பி குடும்பத்தை தாக்கிய வீடியோவை ஷேர் செய்யும் திமுக

  • சென்னை: கிறிஸ்துவம் தனக்கு கற்று கொடுத்தது அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி என நிதியமைச்சர் மரியவில்சன் சட்டசபையில் பேசியிருந்த நிலையில் சொத்துக்காக தனது சொந்த தம்பி குடும்பத்தை கடுமையாக தாக்கியதாக வெளியான, வீடியோவை திமுகவினர் சமூகவலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பட்ஜெட் வாசித்த போது நிதியமைச்சர் மரியவில்சன், தமிழில் சில உச்சரிப்புகளை சரி வர வாசிக்கவில்லை என்ற அதிருப்தி பலருக்கு எழுந்துள்ளது.

    Advertisement

    அந்த வகையில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதத்தின் போது கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பேசுகையில், "நான் தமிழ் ஆர்வலர், சொற்பொழிவாளர் என்ற முறையில் அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்தேன்.

    அவரின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது. தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார்கள். சில சொற்தொடரில் இலக்கணப் பிழை இருந்தது. நான் இதை குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் வைக்கவில்லை.

    நிதியமைச்சர் மரியவில்சனே, வரும் காலத்தில் பட்ஜெட் வாசிக்க நேர்ந்தால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் (இவர் தமிழ் ஆர்வலர்), அவருக்கு தமிழ் வகுப்பு எடுக்க வேண்டும்" என ராஜேந்திரன் தெரிவித்தார். இதனால் நிதியமைச்சர் மரியவில்சன் கொந்தளிப்புடன் எழுந்தார்.

    Advertisement

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "வேண்டாம், இதை பெரிதுப்படுத்தாதீர், நான் பேசிக் கொள்கிறேன்" என்றார். ஆனால் விடாத மரிய வில்சன், "நான் ஒரு 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித் துறையில் இருந்தேன். எனது உரையாடல்கள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தது. இப்போது இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாட்களாகவே உருவ கேலி செய்வது, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாக என பேசியவர்கள் இப்போது மொழி தொடர்பாகவும் கேலி செய்ய வந்துவிட்டார்கள். எனக்கு எனது கிறிஸ்துவம் சில மொழிகளை கற்றுக் கொடுத்திருக்கிறது.

    அவை, அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி ஆகும். இது தமிழ் படித்தவர்களுக்குக் கூட தெரியாது. நான் பைபிளில் படித்து தெரிந்து கொண்டேன் என கத்திய மரியவில்சன், "நான் இப்படித்தான் பேசுவேன், என்ன கேலி பண்றீங்களா" என கோபத்துடன் கேட்டுவிட்டு அமர்ந்தார்.

    Advertisement

    கடந்த வெள்ளிக்கிழமை திமுகவினர் மீதான விமர்சனத்திற்கு அவர்கள் பதிலடி கொடுக்க முயன்ற போது, கூல் கூல் ரிலாக்ஸ் என சொன்ன மரிய வில்சன் இன்று பொறுமையை இழந்துவிட்டார் என சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இவர் பொறுமையை இழந்தது தற்போது திமுகவுக்கு கண்டென்ட்டாகியுள்ளது. ஆம்! அன்பின் மொழிதான் எனக்கு தெரியும் என மரிய வில்சன் கூறிய வீடியோவுடன், சொத்துக்காக அவரது தம்பி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை திமுகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.

    அந்த வீடியோவுக்கு "கிறிஸ்துவம் கற்றுக் கொடுத்த அன்பு" என தலைப்பிட்டு போட்டுள்ளனர். மரியவில்சன், சட்டசபை தேர்தலில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது இந்த வீடியோ வைரலானது.

    Advertisement

    அதாவது புதுவை லாஸ்பேட்டை பகுதியில் நிதியமைச்சர் மரியவில்சனின் தம்பி மரிய குளோத் என்பவரின் வீடு உள்ளது. மரிய வில்சனுக்கும் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு மரியகுளோத்தின் வீடு புகுந்து அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் என்பவரை மரிய வில்சன் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவானது. இது தொடர்பாக புதுவை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கை எதிர்த்து மனுதாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    DMK shares a video on Marie Wilson's another face when he attacked his brother's family for asset dispute. But in Assembly he preaches Love, affection kind to opposition.