தவெக ஆட்சியில் சட்டசபையை கூட்ட ஆளுநர் நல்ல நாள் குறித்து கொடுக்கிறார்.. திமுக விமர்சனம்

  • சென்னை: கடந்த காலங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை குறிப்பிட்ட தேதியில் கூட்டுவது மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் தான். ஆனால் தற்போதைய த.வெ.க ஆட்சியிலோ ஆளுநர் நல்ல நாள் குறித்து கொடுத்திருக்கிறார் - இந்த நல்ல நாளில் சட்டபேரவையை கூட்டலாம் எனும் வகையில் செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் மாற்றம் - மாற்றம் என சொன்னது உரிமைகளை அடகு வைப்பதுதான் போல! என்று திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பதிவினை திமுக வெளியிட்டுள்ளது.

    Advertisement


    திமுக ஆட்சியில்!

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் செய்திக் குறிப்பு

    Advertisement

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2023-ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 20-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள். மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.

    தலைமைச் செயலகம்,

    சென்னை - 600 009.

    நாள்: 27.02.2023

    முனைவர் கி. சீனிவாசன்,

    செயலாளர்." இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    அடுத்தாக

    தவெக ஆட்சியில்!

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் செய்திக் குறிப்பு

    Advertisement

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி அதாவது, 2026-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளது.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன்கீழ், 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 'நாள்' குறித்துள்ளார்கள். மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனை விமர்சித்துள்ள திமுக, கடந்த காலங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை குறிப்பிட்ட தேதியில் கூட்டுவது சபாநாயகர் தான் என்றும், ஆனால் தற்போதைய த.வெ.க ஆட்சியிலோ ஆளுநர் நல்ல நாள் குறித்து கொடுத்திருக்கிறார் என்றும் மாற்றம் என சொன்னது உரிமைகளை அடகு வைப்பதுதான் போல என்றும் திமுக ஐடி விக் விமர்சித்துள்ளது.

    English Summary

    DMK criticizes the Governor for picking an auspicious day to convene the Assembly under the TVK government.