ஆகஸ்ட் 22ல் கூடுகிறது திமுக செயற்குழு.. ஆக்‌சனுக்கு ரெடியான ஸ்டாலின்.. துரைமுருகன் அறிவிப்பு!

  • சென்னை: ஆகஸ்ட் 22ஆம் தேதி திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவின் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் திமுகவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கேற்க தொகுதி வாரியாக ஆய்வு செய்ய 38 குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை சரி பார்த்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பரிந்துரைக்க தங்கம் தென்னரசு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    Advertisement

    11 பேர் கொண்ட அந்த குழுவினர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே ஸ்டாலினிடம் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துவிட்டனர். ஆனாலும் மறுசீரமைப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனிடையே சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், திமுகவினர் அமைதியாகினர்.

    இந்த நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனால் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் ஸ்டாலின் அடுத்தக்கட்ட ஆக்சனில் களமிறங்குவார் என்று தெரிகிறது.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே மறுசீரமைப்பு பணிகள் முடிக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது. சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

    English Summary

    DMK: DMK Chief Executive Committee Meeting to be Held on August 22, Announces Duraimurugan