பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கிறதா.. இப்படி அவதூறு பேசாதீங்க.. அமைச்சர் வன்னி அரசு!

  • சென்னை: திமுக - பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் வன்னி அரசு பதில் அளித்துள்ளார். பாஜக எதிர்ப்பில் திமுக இன்னும் உறுதியாக இருப்பதாக கூறிய வன்னி அரசு, அப்படி யாராவது பேசினால் திமுகவுக்கு எதிரான அவதூறாகவே பார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் திமுக உடனான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி தவெக உடன் கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் கட்சி சென்ற பின், திமுக கூட்டணியில் இருந்த விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தவெக பக்கம் நகர்ந்தன. இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக மட்டும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. தேசிய அளவிலும் திமுக இந்தியா கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை.

    Advertisement

    இந்த நிலையில் திமுக - பாஜக இடையே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக தவெக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பேசத் தொடங்கின. ஆனால் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், நீட் போராட்டம் உள்ளிட்டவற்றில் பாஜகவுக்கு எதிரான வரிசையிலேயே திமுக நிற்கிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு கனிமொழி, ஆ.ராசா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இருப்பினும் திமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாட்டில் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் அமைச்சர் வன்னி அரசிடம் செய்தியாளர்கள், திமுக - பாஜக இணைய வாய்ப்பா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், பாஜகவை எதிர்க்க கூடியவர்கள் ஒரே புள்ளியில் இணைய வேண்டும்.

    Advertisement

    கடந்த காலங்களில் கூட திமுக உடன் இணைந்ததற்கு முக்கிய காரணம் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு தான். இப்போதும் பாஜக எதிர்ப்பு புள்ளியில் தான் தவெக உடன் இணைந்து செயல்படுகிறோம். தவெக, திமுக இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தொலைநோக்கு பார்வையில் சொல்லப்பட்டது. இந்த கருத்தில் விசிக இப்போதும் இருக்கிறது.

    அதேபோல் மக்களுக்கு எதிரான ஆட்சியை, மாணவர்களுக்கு எதிராக ஆட்சியை பாஜக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மோடி அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்காக மாணவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இதன்பின் பாஜக எதிர்ப்பு புள்ளியில் அத்தனை கட்சிகளும் ஒன்று சேரும். அதேபோல் திமுக - பாஜக கூட்டணி இணையுமா என்பது தெரியாது. ஆனால் பாஜக எதிர்ப்பில் திமுக இப்போதும் உறுதியாகவே இருக்கிறது. '

    Advertisement

    நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமாகவே இது புரிந்து கொள்ள முடியும். அப்படி யாராவது கூறினால், அது திமுக மீதான அவதூறாக தான் பார்க்க முடியும். பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறோம். திமுக தொடர்ச்சியாக பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK: DMK Firm in Opposing BJP, Minister Vanni Arasu Dismisses Alliance Speculation as Slanderous