தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? ஆ.ராசா கிண்டல்!

  • சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா என்று திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் இல்லாதவர்கள் கூட கூட்டம் நடத்தலாம் என்று கூறிய ஆ.ராசா, தவெகவின் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை சாடியுள்ளார்.

    Advertisement

    மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆனால் திடீரென தவெக அரசு தரப்பில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டி இருக்கிறார். இந்தக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடக்கவுள்ளது.

    Advertisement

    ஆனால் திமுகவின் 30 எம்பிக்களும், அதிமுகவின் 4 எம்பிக்களும், மக்கள் நீதி மய்யம், தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்க மாட்டோம் என்று புறக்கணித்துள்ளன. இதில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் 20 எம்பிக்களும் மட்டும் பங்கேற்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    திமுக தரப்பில் கனிமொழி, தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை. இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம்.

    Advertisement

    அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா? காவிரி பிரச்சனைக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப தவெக அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம்.

    எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில், திமுக பங்கேற்காது. என்று அறிவித்துவிட்டார். இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் தவெகவின் அனைத்து எம்பிக்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் இல்லாத கட்சி கூட கூட்டத்தை நடத்தலாம்.

    Advertisement

    ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட்டம் நடத்துவது கேலிக்காத்தாக இருக்கிறது என்று கிண்டல் செய்துள்ளார். ஆ.ராசாவின் இந்த பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    English Summary

    DMK: DMK MP A Raja Slams TVK's All-Party MP Meeting Over Delimitation Bill