இனி மேடை போட்டு பேச வேண்டாம்.. வீடு வீடாக போங்க.. இடைத்தேர்தலில் வியூகத்தை மாற்றிய திமுக

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக புதிய வியூகத்தை அமைத்திருக்கிறது. இம்முறை மேடை பிரச்சாரம் அல்லாமல், வீடு வீடாக சென்று மட்டுமே வாக்கு சேகரிக்க உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் மதுராந்தகம் தொகுதியை 7 பாகமாக பிரித்து நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. ஏற்கனவே வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்து, இன்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தரப்பில் மதுராந்தகம் தொகுதியில் ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல் அதிமுக தாராபுரம் தொகுதியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்திவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யின் பிம்பத்தை உடைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    இதனிடையே திமுக தரப்பில் கருத்துக்கணிப்பும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மதுராந்தகத்தில் திமுக கடுமையாக போராடினால், வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து நிர்வாகிகள் மதுராந்தகம் தொகுதியில் இறக்கிவிடப்பட உள்ளனர். மதுராந்தகம் தொகுதியை 7 பாகமாக பிரித்து நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் நியமிக்க உதயநிதி உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் இளைஞரணி நிர்வாகிகளை கடுமையாக உழைக்க அறிவுறுத்தி இருக்கிறார். இம்முறை மேடை பிரச்சாரம் அல்லாமல், வீடு வீடாக சென்று மட்டுமே வாக்கு சேகரிக்க உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் திமுக இந்த இடைத்தேர்தலில் புதிய வியூகத்துடன் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.

    மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதனை விஜய்யின் ஒருநாள் பிரச்சாரம் மறைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் திமுக மட்டுமல்லாமல், அதிமுக, கம்யூனிஸ்ட்கள், சீமான் உள்ளிட்ட அத்தனை தலைவர்களையும் எதிர்த்து தவெக சமாளிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    English Summary

    DMK: DMK Shifts Focus to Door-to-Door Campaigning for Madurantakam and Dharapuram Bypolls