சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் பிரச்சினைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயநோய் பிரச்சினை இருப்பதாக சொல்லப்படுகிறது.
Advertisement
திமுகவின் பொதுச் செயலாளராக கே.அன்பழகனின் மறைவுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் நீர் வளத் துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் நீண்டகாலமாக எம்எல்ஏவாக இருந்த மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.