போடுற உழைப்பு வீண்தான்.. பொதுஜனம் கண்டுக்க மாட்டிது.. ஒரு திமுக ஆதரவாளரின் ஆதங்கம்!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இத்தனை நாட்களாக தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், திடீரென தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக சதி என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதனால் விரக்தி அடைந்த திமுகக்காரர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதவியை எழுதி இருக்கிறார். அதனை விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைக்கப்பட்ட நாள் முதலே மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, அமைச்சர்களின் பொறுப்பின்மை, அமைச்சர் கில்லி சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியாகியது. அதேபோல் ஆய்வு என்ற பெயரில் மருத்துவமனைகள், பள்ளிகளில் தவெகவினர் செய்த சேட்டைகள், அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது என்று ஏராளமான சர்ச்சைகள் நிகழ்ந்தன.

    Advertisement

    இதனிடையே தவெக எம்எல்ஏ-வை ரூ.35 கோடி கொடுத்து வாங்க திமுக முயற்சித்ததாக சில கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன. தவெக செய்யும் எந்த சேட்டைகள், அமைச்சர்களின் சர்ச்சை வீடியோக்கள் எதுவும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவில்லை. இன்னொரு பக்கம் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக சொல்லப்பட்ட செய்தி தவெகவினரால் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாகவே வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திமுக ஆதரவாளர் ஒருவர் சோசியல் மீடியா பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். அது ஒட்டுமொத்த திமுகவினரின் ஆதங்கமாகவே பார்க்கப்படுகிறது. அதில், "தினமும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டு தவெகல இணையுறான், அதை சகஜமாகதான் எடுத்துக்குது பொதுஜனம்..

    Advertisement

    ஆனா தவெக எம்எல்ஏவை விலை பேசினர்னு ஒரு புரளியை கிளப்பி 5 பேரை கைது பண்ணி களத்தை தங்களுக்கு சாதகமாக வச்சிக்குறானுக..திமுக கூட்டணியையே களீபரம் பண்ணி புது கூட்டணி அமைக்குறானுக, அதை விடுத்து ஸ்டாலினோட பேச்சை பேசுப்பொருள் ஆக்குறானுக.. பொதுஜனமும் அதைதான் பேசுது..

    ஓபனாக போதைப்பொருள் யூஸ் பண்ணிருக்கான் அமைச்சர் அதையும் எவனும் கண்டுக்கல..ஸோ இவர்களுக்கு இப்ப இதுதான் தேவை, இவர்களுடைய ஆட்சியைதான் விரும்புகின்றனர்.. போடுற எபோர்ட் பூரா வீண்தான்.. நாலரை வருசம் கம்னு இருந்து கடைசியாக களமிறங்கி ஜெயிக்கலாம்னா நாம ஜெ இல்ல.. சரி இப்பவே குரல் கொடுப்போம்னா எதுனா பண்ணி அதுக்கு எபக்ட் இல்லாம பண்ணிடுறானுக.. டெலிகேட் பொசிசன் ட்டூ டிஎம்கே... வாட் ட்டூ டூ" என்று பதிவிட்டுள்ளார். இது திமுகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    English Summary

    DMK: Efforts of DMK cadres are waste due to public is supporting tvk vijay says a DMK supporter in social media